ஓட்டமாவடியில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வரவேற்பு கூட்டம்

(த.லோகதக்சன்)

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.


ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஸாட் பதியூதீன், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மட்டக்களப்பு பொலநறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ரிதிதென்ன ஜெயந்தியாய கிராமத்தில் அக்கிராம மக்களால் வரவேற்கப்பட்டதுடன், நாவலடிச் சந்தியில் அப்பகுதியில் உள்ள மீள்குடியேற்ற மக்களால் நாவலடி சந்தி பள்ளிவாயலில் வரவேற்கப்பட்டு மீண்டும் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் மௌலவி மஜீத் அவர்களால் விஷேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது.

அதிதிகள் ஊர்வலமாக பொதுக் கூட்டம் இடம்பெற்ற ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு கலந்து கொண்ட அதிதிகளால் உரை இடம்பெற்றது