மட்டக்களப்பில் ஆங்கிலக் கல்வியின் சிகரம் சாய்ந்தது


(சிவம்)
மட்டக்களப்பு புகையிரத குறுக்கு வீதியை வதிவிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் சிவசுப்பிரமணியம் சரவணபவன் இன்று திங்கட்கிழமை (26) காலமானார்.

ஊழைப்பின் ஊதியத்தை எதிர் பார்க்காமல் மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை ஊட்டவேண்டும் என்ற தூய சிந்தனையோடு நேரம் காலம் மற்றும் தனது சுகயீனம் பாராது ஆசிரிய சேவையே மகேசன் சேவை எனக் கருதி ஏனையோருக்கு முன்மாதிரியாக திகழந்த சரவணபவன் சேர் என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்பட்டவர் இன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்.

இவர் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ( ஆங்கிலம்), பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( நிர்வாகம்) மற்றும் வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல்) ஆகிய பதவி வகித்து ஓய்வு பெற்றவராவார்.

அன்னாரின் புதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு   எதிர்வரும் வியாழக்கிழமை (29) காலை 10.00 மணிக்கு கள்ளியங்காடு இந்து மயானத்துக்கு  தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.