கால்நடை பண்ணையாளர்களை உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர்

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மயிலத்தமடு, பெரியமாதவணை கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பினர் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோடு மேய்ச்சல்  தரைக்கான காணிகளை உறுதிப்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த செவ்வாக்கிழமை (27) வேளை 15 கால்நடை பண்ணையாளர்களை வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதுடன் தங்களது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்ததாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மறுநாள்; புதன் கிழமை காலை சித்தாண்டி பால்பண்ணை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மேற்படி அமைப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம்,கோ.கருணாகரம் ஆகியோர்களுடன் விசேட மக்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது தங்களது கோhரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் மட்டக்களப்பு  அரசாங்க அதிபரிடம்  சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொண்டிருந்தனர்.

 தங்களது மகஜரில் அடங்கிய கோரிக்கைகளாவன;

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சல் தரைக் காணிகளை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்ற மயிலத்தமடு, பெரியமாதவணை பகுதிகளில் 27.01.2915  (செவ்வாய' கிழமை) அன்று அதிகாலை 5.00 மணியளவில் வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்களால் 15 கால் பண்ணையாளர்கள் கைது செய்யப்பட்டு தெஹியத்த கண்டிய பிரதேச நீதி மன்றத்திடம் ஒப்படைத்து அன்று மாலை 5.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டு மீன்டும் 10.07.2015 ஆம் திகதியன்று நீதி மன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

மேற் கூறிய விடயம் தொடர்பாக  நாங்கள் அத்துமீறி வன ஜீவராசிகள் பகுதிகளுக்குள் உள் நுழைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயமானது எங்களது தொழில் முயற்சிக்கு பாதகமாக அமைவதுடன் இப் பிரதேசத்தில் கால் நடை பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாத நிலமை  ஏற்பட்டுள்ளது.    

கால் நடைக்கான காணிகளை வரையறை செய்வதுடன்  இதனூடாக மாவட்ட எல்லையை உறுதிப்படுத்தி தருமாறும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபருக்காக சமர்பிக்கப்பட்டது.