உபவேந்தர் கதிரையை தக்கவைத்துக்கொள்வதற்காக மாணவர்களை பலிக்கடாவாக்கும் ஆசிரியர்கள் -உபவேந்தர்

(சித்தாண்டி நித்தி) உபவேந்தர் கதிரையை தக்கவைத்துக் கொள்வதற்காக அப்பாவி மாணவர்களை பலிக்கடவாக்கும் ஒரு சில ஆசிரியர்கள் என கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  30.01.2015 பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. 
கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக உபவேந்தர் மேலும் கருத்துதெரிவிக்கையில்;

குறிப்பிட்ட ஆசியர்கள் தங்களின் சுயநலத்தையடைவதற்காக அப்பாவி மாணவர்களை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் ஏற்படுத்திவருகின்றனர். 

குறிப்பிட்ட ஆசிரியர்கள் காலம் காலமாக உபவேந்தர் கதிரைக்காக ஆசைப்பட்டு போட்டிபோட்டு பேரவையினால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் உவேந்தர் பதவிக்காக தற்பொழுது அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பயன்படுத்தி கதிரையை அடைவதற்கு மாணவர்களைப் பயன்படுத்தி நடைபெற்ற செயற்பாடு என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று நடைபெற்ற மாணவர் கவனயீர்ப்பு போராட்டமானது கிழக்கு பல்கலைக்கழக ஒட்டுமொத்த போராட்டமல்ல. கலைகலாசார பீடத்திலுள்ள ஒரு சில மாணவர்களினால் முதலாம் வருட மாணவர்களை தவறான முறையில் பயன்படுத்தி நடைபெற்ற செயற்பாடாக நான் இதைக்கருதுகின்றேன்.

மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட வேண்டுமாகயிருந்தால் பல்கலைகழக உபவேந்தருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கவேண்டும். ஆனால் அப்படியொன்றும் நடைபெறவில்லை. எவ்விதமான முன் அறிவித்தலுமின்றி ஊடகத்திற்கு தாங்களின் செயற்பாடுகளை காட்டிக்கொள்வதற்காகவும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாக காட்டிக்கொள்வதற்காகவும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களினால் நடாத்தப்பட்ட ஒரு போராட்டம்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உட்ப்படட நிருவாகத்தில் ஊழல் நடந்திருந்தால் தகுந்த ஆதாரத்துடன் ஊழல் மற்றும் லஞ்ச ஆணைக்குழுவுக்கு அல்லது உயர் கல்வி அமைச்சருக்கு ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கவேண்டும். இவ்வாறான செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன். இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் படித்த அறிவாளிகளுக்கு நான் தெரியப்படுத்துவது இவ்வாறான செயற்பாடுதான் நாகரியமான செயற்பாடாகும்.

அதைவிடுத்து சுயதேவைக்காக அப்பாவி மாணவர்களைத் தூண்டி நடைபெற்ற இச்செயற்பாடு மிகவும் கீழ்தரமான செயற்பாடாக பார்க்கப்படவேண்டும்.

இவ்வாறன செயற்பாடுகளை பல்கலைகழகத்திலுள்ள சுமார் 5பேர் கொண்ட மாணவர்களினால்தான் இவ்வாறான செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கு. 

இது ஜனநாயக முறைப்படி நடந்த போராட்டமும் இல்லை, இது உபவேந்தரை விலத்திப்போட்டு தன் கதிரையை பிடிக்க ஆசைப்படும் குறிப்பட்ட நபர் அப்பாவி மாணவர்களை தவறான முறையில் வழி நடத்தி, குறிப்பட்ட நபர்கள் சமூகத்தில் சிறந்த உதாரணமாக மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் மிகவும் மனவேதனையான விடயமாகவிருக்கின்றது. 

இது சம்பந்தமாக மட்டக்களப்பு மக்கள் தெளிவுபடுத்தவேண்டும் என்பதை கேட்டுக்கொள்வதோடு, உபவேந்தர் தான் ஊழல் செய்வதாக ஆதாரம் இருந்தால் அவர்கள் படித்தவர்கள் என்ற முறையில் உரிய இடத்தில் சமர்ப்பிப்பதை தவிர தெருவில்போவதைப் போன்றோ படியாதவர்களைப்போன்று கீழ்தரமான செயற்பாடுகளை முன்னனெடுப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.

அத்துடன் கிழக்கு பல்கலைகழகத்தில் அண்மைக்காலமாக நிருவாகத்தேவைகள் கருதி ஒரு சில இடங்களில் சிசிரிவி கமெரா பொருத்தப்பட்டுள்ளது அதுதொடர்பாகவும் நாங்கள் தற்பொழுது கவனமெடுத்திருக்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது நல்லதொரு நிலமை நாட்டில் உருவாகியிருக்கின்றது அதன் காரணமாக ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது கமெரா அகற்றுவது தொடர்பாக, அதனடிப்படையில் தற்பொழுது சிசிரிவி கமெரா அகற்றப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல்கலைக்கழக சட்டத்துக்கு முரணான செயற்பட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற வழக்கில் இருக்கும் மாணவர்கள் தங்களின் வழக்கில் இருந்துவிடுபடுவதற்கு அப்பாவி மாணவர்களை பலிக்கடாவாக்கின்றார்கள். இதைப் பயன்படுத்தி ஆசியர்கள் சிலர் உபவேந்தர் பதவியை அடைவதற்காக இவ்வாறான செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றார்கள் என குறிப்பிட்டார்.