யுத்தத்திலே அரசாங்கம் வெற்றிபெற்றதை வரலாறு என்றால் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறுவதும் வரலாறுதான்

(சித்தாண்டி நித்தி) யுத்தத்திலே அரசாங்கம் வெற்றிபெற்றதை வரலாறு என்றால் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறுவதும் வரலாறுதான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் கடந்த 1987ம் ஆண்டு நடைபெற்ற படுகொலையை நினைகூறுமுகமாக கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று (28) புதன்கிழமை நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாள் தினத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றோம். கடந்த ஆயுத போராட்டம் இடம்பெற்ற காலத்தில் கூட இவ் நிகழ்வு மிகவும் உணர்பூர்வமாக கொண்டாடப்பட்டது.

2009 மே மாதம் 19 திகதிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் பல வதயங்கள், அட்டூழியங்கள், ஆக்கிரமிப்பு மத்தியிலும் இவ் நினைவு நிகழ்வை நாடத்தியிருந்தோம். 

கடந்த வருடத்திற்கு முன்பு நாங்கள் இதே மண்டபத்தில் இந்த நினைவு நாளை அனுஸ்டிப்பதற்காக வந்தபோது இறுதி நேரத்தில் இவ் மண்டபம் பூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளை கொண்டாட மறுத்த வரலாறும் இருக்கின்றது.

ஆனால் எந்த மண்டப உரிமை மறுக்கப்பட்டு பூட்டப்பட்டதோ அந்த மண்டபத்திலே இவ் நிகழ்வை நடாத்த வேண்டும் என பட்டிப்பளை இலங்கை தமிழரசு கட்சி கிளையினர் தீர்மானித்தார்கள் அதற்கு அமைவாக இந் நிகழ்வு நடைபெற்றது.

உண்மையில் கடந்த 55 வருடகால போராட்ட வரலாற்றிலே லட்சக்கணக்கான பழிகொடுத்த ஒரு இனமாக இருக்க கூடியவர்கள் தழிழ் இனம் மட்டும்தான்.

ஆனால் மூவின மக்களும் கடந்த 55 வருடகால போராட்டத்தில் கடந்த 30 வருடகால போராட்டத்தில் மடிந்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறுப்பதிற்கில்லை. 

போராட்டத்திலே ஆயிரத்திற்குப்பட்ட மக்களை மரணித்த ஒரு இனமாக இருப்பது பிரித்தானியா என்பதை என்னிடமுள்ள ஆதாரங்கள் அதனை தெளிவுபடுத்துகின்றது. 

இருந்தும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்களை பரிகொடுத்தவர்கள் சிங்கள மக்கள் ஆனால் லட்சக்கணக்கான உயிர்களை இழந்தவர்கள் தமிழ் மக்கள் மட்டும் தான்.

லட்சக்காணக்கான மக்களை இழந்தாலும் கூட அவர்களின் நினைவு நாளைக் சுதந்திரமாக நடாத்தமுடியாமல் நாங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் 17பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தை கொண்டாட முடியாமல் தடை உத்தரவு செய்யப்பட்டு நாங்கள் வெரட்டி அடிக்கப்பட்ட வரலாறும் உள்ளது.

1990 ஆண்டு ஆகுர்தியான சத்துருக் கொண்டான் படுகொலை நினைவு தினத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சகிதம் சென்றபோது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம்.

அதனைவிட போராட்டத்தில் ஈடுபட்டு ஆகுர்தியாகிய நற்பதாயிரம் மாவீரர்களை கூட நாங்கள் நினைக்க முடியாமல் இருந்துகொண்டிருக்கின்றோம். 

ஒரு இனத்தின் வரலாறு என்பது அந்த இனத்தின் சரித்திரம் என்பதை பார்க்கின்றபோது ஒரு இனம் இங்கு வாழ்ந்திருக்கின்றது, இன்னும் 65 வருடங்களாக அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அடிமைகள் என்ற பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திய நாங்கள் பல்வேறுபட்ட மக்களை இந்த மண்ணிலே ஆகுர்தியாக்கியிருக்கின்றோம். 

இந்த வரலாற்றுப் பிண்ணனியில் தான் கடந்த ஒரு தேர்தலையும் நாங்கள் சந்தித்திருக்கின்றோம். 

கடந்த  10 ஆண்டுகளாக கொடூர ஆட்சியின் கீழ் உள்ள ஒரு மன்னன் என்று கூறக்கூடியதும் இனப் படுகொலையாளனுமாக இருக்ககூடிய முன்னாள் அதிபர் மகிந்தராஜா பக்சா ஆட்சியில் தமிழ் இனமாகிய நாங்கள் மிகவும் மோசமான தும்ப துயரங்களைப்பட்டிருந்தோம். 

நடைபெற்ற போராட்டம் 2009 மே மாதம் 19 திகதி முற்றுகைக்கு கொண்டு வந்ததாக அறிவித்தாலும் கூட அவ்விடயத்தை சமதானமென்று காட்டிக் கொண்டு கடந்த 5 வருடங்களும் எங்களை சுதந்திரமாக வாழ முடியாமலும் சுதந்திரத்திற்காக இறந்தவர்களை நினைக்க முடியாமலும் வாழ்ந்த காலங்களையும் இன்று நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

ஆகவே உண்மையான சமாதானம் என்று கூறினால் ஒரு போராட்டம் நிகழ்த மண்ணிலே அந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்வது மட்டுமல்ல அந்த போரிலே ஈகம் செய்யப்பட்ட தியாகம் செய்யப்பட்ட ஆகுதியான மக்களையும் நாங்கள் நினைத்துவரும்போதுதான் அது உண்மையான சமாதானமாக அமைந்திருக்கும். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற அட்டூழியம், அஜாரகம் ஆட்சினால் நாங்கள் அவ்வாறான நினைவுகளை கூட நடாத்தவில்லை, நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.  

ஆனால் தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆட்சி மாற்றத்திற்குபிற்பாடு வடகிழக்கில் இடம்பெறுகின்ற முதலாவது படுகொலை நிகழ்வை நாங்கள் இந்த மட்டக்களப்பபு கொக்கட்டிச்சோலை பாடுகொலை நினைவு தினத்தை நடாத்துவதையிட்டு தமிழ் பேசும் மக்களாகிய நாங்களும் தேசிய கூட்டமைப்பும் பெருமையடைகின்றது, நானும் பெருமையடைகின்றேன். 

நாங்கள் ஏன் செய்கின்றோம் என்றால், இதற்குபிற்பாடு இன்னும் பலபடுகொலை தினங்கள் நடைபெறயிருக்கின்றது. அந்த படுகொலை தினங்களையும் கொக்கட்டிச்சோலையில் நடாத்தியதற்குபிற்பாடு அந்த அந்த இடங்களிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஆகவே இவ்வாறான படுகொலை நினைவு நாட்களை உரிய இடத்தில் மக்களுடன் இணைந்து நடாத்தும்போதுதான் படுகொலையில் தமது உயிர்களை உயிர்நீத்த ஆகுதியான ஆத்மாக்களின் உறவுகளும் கண்ணீர் விட்டு அழுது தமது மனக்கு முறல்களை வெளிக்காட்டி அவர்களையும் நினைவுபடுத்தமுடியும். 

கொக்கட்டடிச்சோலையில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தைப் பார்க்கின்றபோது 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி  இப்படுகொலை இடம்பெற்றது. 

இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதே ஆண்டில் தான் 7ம் மாதம் 29ம் திகதி கைச்சாதிப்படுகின்றது. 

இந்த கொக்கட்டிச்சோலைக்கு பிற்பாடு சரியாக 6 மாதத்தினால் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும், கொக்கட்டிச்சோலை படுகொலை இடம்பெறுவதற்கும் முன்பும் பல்வேறுபட்ட படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. 

குறிப்பாக 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி யாழ்ப்பாண தமிழாராட்சி மாநாட்டிலே 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

1983ம் ஆண்டு 7ம் மாதம் 25ம் திகதி வெளிக்கடையிலே இருக்கக்கூடிய குட்டிமணி மற்றும் ஜெகன் உட்ப்பட்ட 35 போரளிகளும் அவர்ளுடன் இருந்த இளைஞர்களும் வெளிக்கடையிலே படுகொலை செய்யப்பட்டார்கள். 

வெளிக்கடை படுகொலை நடந்து இரண்டு நாட்கள் கழிந்த பிறகு 1983 ஆண்டு 7ம் மாதம் 27ம் திகதிமேலும் 19 இளைஞர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டார்கள். 

அம்பாரை உடும்பன்குளத்தில் 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் திகதி நடைபெற்ற படுகொலையில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பிற்பாடு தான் கொக்கட்டிச்சோலை இப் படுகொலை நடைபெற்றது என தனது உரையின்போது தெரிவத்தார்.

அவர் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பக உரையாற்றுகையில் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நினைக்கலாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு தாங்கள் ஆட்சிபீடத்திற்பு வரலாமென்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காமல் தங்களின் ஆட்சி அதிகாரங்களை வைத்திக்கொண்டு கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமாக இருக்ககூடிய நிலப் பிரச்சினை மற்றும் பல பிரச்சினைகள் இருக்கின்றது, இதனை அவர்கள் தங்கிளின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள் எடுக்கவிடமாட்டோம் என்பதை நான் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடகிழக்கிலே இருக்ககூடிய காணி பிரச்சினையாக இருந்தாலும் சரி, வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பை மறந்து அவர்கள் எந்த முடிவையும் எடுக்கமடியாது என நான் ஆணித்தரமாக தெரிவிக்கின்றேன். 

அவ்வாறு தான் முதலமைச்சர் பதவியைப் பெற்றாலும், அவர்கள் ஆட்சியை செய்துகொண்டிருப்பார்களே தவிர நிச்சயமாக காணிப் பிரச்சினை விடயத்தில் மிகப்பெரிய ஒரு தவரை விட்டிக்கின்றார்கள் என்பதை அப்பாவி முஸ்லிம் மக்களும் புத்திஜீவிகளும் மிக விரைவில் உணருவார்கள் என்ற செய்தியை தெளிவாக கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். 

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு நிரந்தரமான சமாதானமில்லை. எதிர்வரும் மூன்று மாதத்திற்கு பிற்பாடு ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கம் இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய தீர்வொன்றை வழங்குவார்களாக இருந்தால் அதுதான் நிம்மதியான சமாதானமாக அமையுமென தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாங்கள் தேர்தலில் காட்டிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்வரும் தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருந்து பல மிக்க ஒரு மாற்றத்தை கொண்டுவரும் வேளையில்தான் எமது எதிர்கால இலட்சியத்திற்காகவும் எமது மண்ணிலே மாண்ட மாவீரர்களின் தியாகத்திற்காகவும், முள்ளிவாய்க்கால் வரை மரணித்த ஒரு லட்சத்து நாற்பத்தையாயிரம் மக்களின் தியாகத்திற்காகவும் நாங்கள் செய்கின்ற கடப்பாடாக இருக்குமென்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

எமது மண்முனை தென்மேற்கு பகுதியை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு கிராமத்திலும் மாவீரர்கள் ஆகுதியாகியிருக்கின்றார்கள். 

அந்த வகையில் முனைக்காட்டில் 414பேர், அம்பலாந்துறையில் 85பேர், அரசயடித்தீவில் 65பேர், கொக்கட்டிச்சோலையில் 55பேர், பட்டிப்பளையில் 72பேர், முதலைக்குடாவில் ஏறாக்குறைய 75பேர், இங்குள்ள ஒவ்வாரு கிராமத்திலும் மாவீரர்கள் இருந்துகொண்டிருக்கின்றர்கள்.

ஆனால் அவர்களைப் பற்றி பேசுவதோ கதைப்பதோயில்லை. அவர்கள் செய்த தியகத்திற்காக நாங்கள் அவர்களை நினைவு கூறவேண்டுமாக இருந்தால் நாங்கள் சுதந்திரமானதொரு நிலையை அடையவேண்டும். 

உயிர் நீத்தவர்களை நாங்கள் நினைக்காமை அடுத்தகட்ட அரசியலை ஏற்படுத்த முடியாது. 

ஆகவே ஒரு வரலாறு என்பது இந்த நாட்டிலே யுத்தமேற்பட்டிருக்கின்றது. நடைபெற்ற யுத்தத்திலே இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்டிருக்கின்றது இது வரலாறு என்று அரசாங்கம் கூறுமாயிருந்தால், தென்பகுதி சமூகம் கூறுமாயிருந்தால் அந்த யுத்தத்தில் தன் உயிர்களை நீத்த மாவீரர்களை தமிழர்களாகிய நாங்கள் நினைவுபடுத்தி நினைவு கூறுவதும் வரலாறுதான் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றேன். 

ஆகவே வரலாறு என்பது யுத்தமென்பது வெறுமனவே வந்து போராடியதல்ல, போராடியிருக்கின்றார்கள், மாண்டிருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் நினைக்கமுடியாமல் இருக்கமுடியாதென்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கின்றேன். 

கொக்கட்டிச்சோலை படுகொலையைப் போன்று மகிலயடித்தீவில் இடம்பெற்ற படுகொலைக்கும் சேர்ந்ததாக மகிழயடித்தீவு சந்தியிலே ஒரு நினைவு தூபி கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவுத் தூபியைக்கூடி விட்டுவைக்கவில்லை ஆக்கிரமிப்பாளர்கள். அதனையும் இடித்து தகர்திருக்கின்றார்கள். இவ் நிகழ்வைக் கூட அங்குதான் நடாத்தவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள், அது உடைந்து சிதைந்துள்ளது அடுத்த முறை தூபி புணரமைக்கப்பட்டதும். நடாத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. 

ஆகவே நினைவுத் தூபிகள் நினைவுத் தூபிகளாக வரவேண்டும். இறந்தவர்களை அவர்களின் தியாங்களை நாங்கள் நினைக்க வேண்டும்.