நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பொங்கலும் கலந்துரையாடல் அமர்வும்

(படுவான் பாலகன்) முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பொங்கல் நிகழ்வும், பட்டிக்காரர்களுடனான கலந்துரையாடல் அமர்வும் இன்று(31) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது பட்டிகாரர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களது காலத்தில் கோமாதவின் முக்கியத்துவம், அதனை வளர்க்கின்றவர்களுக்கு சமூகத்தில் இருந்த அந்தஸ்து, தற்காலத்தில் அதன் தன்மை என பல்வேறு விடயங்களை இதன் மூலம் பகிர்ந்து கொண்டனர்.


மன்றத்தின் தலைவர் இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாநிதி சி.ஜெயசங்கர், கிராமப்பெரியார்கள், ஓய்வுபெற்ற கொத்தனி அதிபர், ஆலய தலைவர்கள், பட்டிக்காரர்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.