கிழக்குப் பல்கலைக் கழக ஊழல் மோசடிகளுக்கு உடனடி விசாரணை வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் நிருவாக சீர்கேடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரி கிழக்குப் பல்கலை கழக மாணவர்கள் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாகஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 “வெளியேற்று வெளியேற்று கனடிய VC யை உடனடியாக வெளியேற்று” “இங்கே எடுத்ததை இங்கேயே கொடுக்கவை” 
ஆணைக்குழுவை உடனடியாக நியமி” “
நிறுத்து நிறுத்து மாணவர் அடக்குமுறையை உடனடியாக நிறுத்து”, 
“நிறுத்து நிறுத்து பிழையான நியமனங்களை உடனடியாக நிறுத்து”, “வாங்காதே வாங்காதே மாணவர்களைப் பழிவாங்காதே” ,
 “ வேண்டாம் வேண்டாம் ஊழல்வாதிகள் பேரவையில் வேண்டாம்” “உறுதிசெய் உறுதிசெய் மாணவர் உரிமையை  உடனடியாக உறுதிசெய்” “பறிமுறைல் செய் பறிமுதல் செய் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்” கவனி கவனி மாணவர் கல்வியைக் கவனி” “ 
குழப்பாதே குழப்பாதே மாணவர் ஒற்றுமையைக் குழப்பாதே” “  
போன்ற வாசகங்களை எழுதி பதாதைகளை ஏந்தி போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழலுக்கு எதிராண மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் நிருவாக சீர்கேடுகள் தொடர்பான அறிக்கையொன்றினையும் வெளியிட்டனர்.
 

அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

"கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தில் மாணவர் அடக்குமுறை நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பது மாணவர்களது கோரிக்கைகளில் அடங்கியுள்ளன.

மாணவர்கள் பிரதான வீதியோரம் தமது கோரிக்கைகள் குறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுள்ளனர்

அன்பார்ந்த மாணவர்களே! சிந்தனையாளர்களே! நாங்கள் இங்கே குறிப்பிடப் போகும் விடயங்களுக்கு பொறுப்பானவர்களின் நடவடிக்கைகளால் உயர் கல்வி பல்கலைக்கழகத்திற்கே அவப்பெயர் உண்டாகும் என்பதை மன வேதனையுடன் கூறிக்கொள்கின்றோம்.
•    மாணவர் உரிமை, நலன், சுதந்திரத்தை இல்லாமல் செய்தமை!!!!
•    எவருக்கும் இல்லாத பொலிஸ் பாதுகாப்பு எதற்கு ? பயப்படுவதற்கான காரணம் என்ன?
•    கனேடிய பிரஜை போல் வந்த உபவேந்தரின் ஊழல் மற்றும் மோசடிகள..
•    உபவேந்தர் குழுமத்தின் பாதுகாப்பு, உயர் பதவிகள…
•    நாகரிகமற்ற தொடர்பாடல் முறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள்…
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கையினை ஒரு தனி மனிதனின் சுயவிருப்புக்கு ஏற்ப எதேச்சிகரமான முடிவுகளை மூதவையின்

(Minites)சினை வீட்டிலே தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு மூதவையிலும்இ பேரவையிலும் இவர் மேற்கோள்காட்டி “ நான் இரவு உணவு அருந்தும் போது எனது …….. 
இப்படிச் சென்னார் என்று” கூறுவதாயின் மூதவையோ அல்லது பேரவையோ எதற்கு? மூதவை மற்றும் பேரவையினை ஒரு ஒழுங்கு கிரமம் இல்லாமல் உபவேந்தர் குழுமத்தின் அதிகாரத்தில் இயக்கப்பட்டு மற்றும் இயக்கப்பட்படுகின்றது.

பல்வேறு நிதி ஊழல்கள் பதவி உயர்வு, புதிய விரிவுரையாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, மாணவர்களுக்கு எதிரான பல்வேறு முறையிலான பழிவாங்கல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாரிய துஸ்பிரயோங்கள்   இவை மட்டும் எமக்கு தெரிந்தவை தெரியாமல் நடந்ததாக கூறப்படும் பதவி விலகல்கள். உபவேந்தரின் வாசஸ்தலத்தில் வேலை செய்த பெண் பணியாளர்கள் பல பேர் இவரது நடத்தையினால் வேலையினை விட்டுச் சென்றுள்ளனர்.


2012.02.12 நியமனத்திற்கு அமைய முன்னைய உயர்கல்வி அமைச்சர் ஒரு கனேடிய சுற்றுலா அனுபவிக்க வந்தவர் போல காட்சிதரும் ஒருவரை நியமித்து இலங்கை பிரஜை ஒருவருக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளார். இதனை அப்போதும்  இப்போதும் அரசிற்க்கு தெரியப்படுத்தியும் இதுவரை அகற்றுவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.


இலங்கையில் எந்த ஒரு உபவேந்தருக்கும் EUSL போல பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக எமக்கு தெரியவில்லை.  இருப்பினும் ஒரு கனேடிய சுற்றுலா உபவேந்தர் 12.02.2012ல் இருந்து 12.02.2015ல்  முடிவடையும் 3 வருட கால உபவேந்தர் பதவியை அலங்கரிக்க வந்த இவருக்கு எதற்கு பொலிஸ்?; இவர் பயப்படும் அளவுக்கு இவர் செய்த தவறுதான் என்ன?
 இவர் 25.07.2012ல் தனது  அடையாள அட்டை  மூலமாக TTIP/01/014053 என்ற கார் அனுமதிப்பத்திரத்தினை கனேடிய சுற்றுலா
உபவேந்தர் 1.275 million விற்பனை செய்துள்ளா

 தற்போதைய கனேடிய உபவேந்தர் கடந்த அரசின் விசுவாசி. ஏனெனில் பல தடவை கூறியிருக்கின்றார். பசில் கோத்தபாய மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்குப் பின்னர் தெலைபேசியில் கதைத்துவிட்டுத்தானாம் உறங்குவார்.


 அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தனது குழுமத்தின் வாழ்த்துச் செய்தியையும் தேர்தல் விதி மீறல் மூலமாக உபவேந்தர் பதவியைப்பயன்படுத்தி பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.(04.01.2015

Sunday times, 05.01.2015 வீரகேசரி) அரச ஊழியராக இருந்து கொண்டு எவ்வாறு செயற்படுவார். இவர் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஊடாக இரண்டைப் பிரஜாவுரிமையைப் பெறுவதனூடாக மீண்டும் அடுத்த தவனைக்கு ஆயத்தமானார்.

இவர் வருகை தந்த வேளையில் பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு விசாரனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தற்போதைய பிரதிப் பதிவாளர், அழகியல் கற்கை நிறுவகத்தின்  இயக்குனர் முன்னாள் பீடாதிபதிகள் பல பேர் இங்கு விசாரணைக்குழுவில் குற்றவாளிகளாக நிறுவி பல பேருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. “ இனம் இனத்துடன் தான் சேரும்’ என்பது போல அனைத்து ஊழல் குற்றவாளிகளும் ஒரு குழுமமாகி புனிதமான கல்வி கற்கும் இடத்தினை சாக்கடையாக்கிய பெருமை இவர்களைளே சாரும். இவர்களுக்கு மேலும் ஊழல் புரிவதற்கு அதிகாரம் வழக்குவது போல பதவி உயர்வுகள் பல வழங்கப்பட்டும் மற்றும் வழங்கப்படவும் உள்ளன.


•    மாணவர் ஆலோசகரும் ஓரு மிகப்பெரிய ஊழல் குற்றவாளி உறுதிப்படுத்தப்பட்ட இவருக்கு தற்போது சிரேஸ்ட மாணவ ஆலோசகராக பதவி உயர்த்தப் பட்டுள்ளார்


•    முன்னால் தற்காலிக உபவேந்தர் (IRQUE) எனும் நிகழ்ச்சிக்கு அமைவாக 24.06.2014 34வது Audit Committee    கூட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட (Director of  SIVIAS) விவசாயப்பீட விரிவுரையாளர் இசை நடனக்கல்லூரி இயக்குனர். நாங்கள் ஒன்றை இங்கு கேட்கின்றோம் விவசாய விரிவுரையாளரினால் இசை நடனக் கல்லூரி  மாணவர்களின் கல்விக்காக மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? இவரே கடந்த உபவேந்தர் தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற ஊழல் வாதியாவார்.


•    அதே பாணியில் முன்னாள் உதவிப்பதிவாளர் 1.5 Million சூறையாடியமைக்கு பதிவாளர் பதவி காத்துக் கொண்டிருக்கிறது. இவர் பல முறை கேடுகள் (IRQUE ) ஊடாக குற்றவாளியாக நிருபிக்கப்பட்ட போதும் பல குறுக்கு வழிகளில் மணல் வினியோகம் மற்றும் கனேடிய உபவேந்தரை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதற்கு தற்போதே பதிவாளர் போல் நடந்து கொள்கின்றார்.


இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் “குரங்கிட கையில் கிடைந்த பூமாலை போல” பல்கலைக்கழகத்திற்கு    4 டயர்களை பூட்டி வீட்டுக்கே கொண்டு போகும் வல்லமை கொண்டவர்……


தற்போதைய உபவேந்தர் குழுமத்தில் உபவேந்தர் தேர்தல் வேட்பு மனுவுக்கு அமைய ஒருசில முதுகெலும்பில்லா விரிவுரையாளர்களை டம்மியாக பயன்படுத்தி உபவேந்தர் தேர்தலை நடத்தியதுடன் பேரவை உறுப்பினர்களுக்கும் பல்வோறு சன்மானங்களையும் வழக்கினார் என்பதை 01.10.2014 அன்று முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எங்களிடம் கூறியிருந்தார்.
 

இங்கு இரவு வேளையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்குழிள்கள் அடங்கிய இரண்டு பக்கமும் உள்ள நுழைவாயில் மற்றும் மதில்களில் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளது. அனுமதிப் பத்திரம் பெற்ற ஒரு நிறுவனம் மதில்களைக்கட்ட அனுமதியில்லாத (Zahran Construction) கம்பனியே நுழைவாயிலைக் கட்டியதுடன் நிதியினைப் பெற முன்னாள் உயர் கல்வி அமைச்சரின் செயலாளர் அனுமதித்தது எவ்வாறு? இதற்கான Procurement Procedure    எங்கே?

உபவேந்தரின்  தொடர்பாடல் முறை மாணவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களிடம் மிகவும்  இழிவாக நடந்து கொள்ளும் கடைநிலை ஊழியரை விட மோசமாக பேசும் தன்மை கொண்டவர் இவர் பேரவையிலோ மூதவையிலோ ஒரு உயர் அதிகாரிகளைப் போல் நடந்து கொள்வதுமில்லை  


இவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்கு பணியாட்கள் தேவைதான் ஆனால் மாணவர்களின் பல கல்வி சாரா வேலைகளுக்கு மத்தியில் நான்கு பேரை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியது மட்டுமல்லாது 3 தனியார் பாதுகாவலர்களையும் அதில் ஒருவர் முச்சக்கர வண்டி ஓட்டுனர். இவர் தனது வேலை நேரத்தில் உபவேந்தரின் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளைப் பெறுவதற்கு தனது ஓட்டோவை பயன்படுத்துவதுடன் அதற்கான பணத்தையும் மாதச் சம்பளத்தையும் பெறுகின்றார். என்பது முக்கியமான விடயமாகும்
ஒழுக்க சீலர்கலாக இருக்க வேண்டிய பேரவையில் ஒரு சிலரது தகாத செயல்களை கண்டும் காணாமல் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உபவேந்தர் 18.04.2014 மாணவர் ஒன்றியத்தை ஒரு விடுமுறை நாளில் (பெரிய வெள்ளி) இரத்துச் செய்து தனது ஊழல்களுக்கு எதிராக வந்தால் இப்படித்தான் செய்வேன் என்று செய்தார். அதோடு விட்டாரா? மீண்டும் அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக செயற்பட்ட மாணவர்கள் சிலரை மாணவர் ஒன்றியத்தில் இருந்து 30.10.2014 நீக்கியமையுடன் விடவில்லை. மீண்டும் 16.01.2015 இவருக்கு எதிராக செயற்பட்ட மேலும் சில மாணவர்களை மாணவர் ஒன்றியத்தில் இருந்து நீக்கி பழி தீர்த்துக் கொண்டார்.


தமிழ் சிங்கள மாணவர்களிடையே குரோத மனப்பாங்கினை துண்டி கலவரங்களை உருவாக்கி பிரித்தாளும் சூட்சியை திறம்படச் செய்தார். இதற்கு உபவேந்தர் கூறிய “23ம் புலி கேசி ஒற்றர்” ஒருவர் விஞ்ஞான பீடத்தில் நியமிக்கப்பட்டிரந்தார். இதன் பிரதிபலிப்பே இவரின் காலப்பகுதியில் இடம் பெற்ற கலவரங்கள் பல்கலைக்கழக மூடுகை மற்றும் மாணவர்களின் கல்வி ஆண்டு அதிகரித்தமையாகும்.


மாணவர்களின் உண்மையானதும் அவசியமானதுமான பல தேவைகள் இருத்தும் கூட அவற்றை புறம் தள்ளி தனது வருவாய் மற்றும் விளம்பரத்துக்காகவே அதிகம் வேலை செய்கின்றார். முன்னாள் உயர் கல்வி அமைச்சர் விஸ்வவர்பால அவர்களின் காலப் பகுதியில் வரவழைக்கப்பட்ட நிதியினை முன்னைய Acting VC மற்றம் உதவிப்பதிவாளர் போன்றோர்களின் ஊழல்கலால் இடை நிறுத்தப்பட்டு      CA அத்தநாயங்கவினால் விடுவிக்கப்பட்டு சுற்றுலா உபவேந்தர் செலவு செய்து இப்போது நாம் காணும் பல பகுதியில் “இவரது காலப்பகுதியில் நிர்மானிக்கப்பட்டது” என்று விளம்பரம் செய்கின்றார். ஆனால் விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் பகுதி கட்டிடத்ததிற்கான நிதியினை பெறுவதற்கு அரும்பாடுபட்ட முன்னைய பட்டிருப்பு தொகுதி பாராளுமனற முயற்சிக்கு 05.02.2013ல் திறப்பு விழாவில் ஒரு நன்றி கூட இருக்கு குறிப்பிடவில்லை என்பது எனைவருக்கும் தெரியும்.


சரசவி மதுரா பாதுகாப்பற்ற விடுதியை கொண்டுவந்த உபவேந்தர் இதன் பாதிப்புப் பற்றி சிறிதளவும் யோசிக்கவில்லை. மருந்துவ பீட 4 மாடி மாணவர் விடுதியை கட்டுவதற்கு அனுமதித்த மணல் பரிசோதனை எங்கே?  4 மாடி கட்டுவதற்கு மாநகர சபையின் அனுமதி எங்கே?  எது நடத்தால் என்ன நமக்கு கொமிசன் வந்தால் போதும் இது தான் அவரின் சிந்தனை…….
குறிந்த விடுதிக்காக கட்டில்கல் வாக்கும் போது இருப்பினால் ஆன கட்டிலைத் தவிர்ந்து மரந்தினால் ஆனான கட்டிலை வாங்க காரணம் என்ன? இதன் உண்மை கதை என்ன? பராமரிப்பு பகுதியிடம் கேட்டதற்கு உயர் கல்வி அமைச்சருக்கு மரத்தளபாடத்தில் ஆசை என்றார். அப்படி ஆசை என்றால் அவரின் வீட்டில் வாங்கிப் போடட்டும். குறைந்த பெறுமதியான கட்டிலுக்கு 54,410/=UP   கொடுத்தது ஏன்? இதில் எவ்வளவு பங்கு இலாபம். 3 விடுதிகளுக்கும் 600 கட்டில் என்றால் நடந்தது என்ன?



 உபவேந்தரின் அடாவடித் தனத்தினை எதிர்க்கும் மாணவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு குடும்ப சூழ் நிலைகளையும் அற்ப பதவிகளையும் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தன் பக்கம் இழுக்க பல முறை சுயற்சி செய்த ஒரு கடை நிலை மனிதர். உதாரணம் - வெளிநாட்டு சுற்றுப்பயணம், விரிவுரையாளர் பதவி, முதன்நிலை மாணவராக தரமுயர்த்தல் போன்றவையாகும்.


இவரது உத்தியோக பங்களாவில் 5க்கு மேற்பட்ட குளிருட்டிகளை பொருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாதாந்த மின் கட்டணம் 90000/= க்கு மேல். இதற்கு முன்பிருந்த எந்தவொரு கௌரவமான உபவேந்தரும் இதனைப் போன்ற சலுகைகளை முற்படவில்லை என்பதுடன் மாணவர்களுக்கான பல அத்தியாவசியமான தேவைகள் இருக்க இவருக்கு இத்தனை  குளிருட்டிகள் தேவைதானா? இதுதானா இவரது நிர்வாகத் திறமை.


02.05.2014 அன்று இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையில் கனேடிய சுற்றுலா உபவேந்தர் மாணவர்கள் பல முறை தாங்கி ஜன்னல் கண்ணாடிக்கு கல்லெறிந்த உடைந்நதாக எவ்வாறு பொலிஸில் முறையிட முடியும். மாணவர்கள் தாக்கியிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவரே 03.05.2014 அன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.  மருந்துவ பீடத்துக்கான வைத்தியருக்கான அழைப்பினை ஏற்று பல்கலைக்கழக திரட்டு நிதியினப் பயன்படுத்தி (பல்கலைக்கழக விவசாயப் பொருள் விற்பனை வருமானம்) சென்றுள்ளார். இது எப்படி இருக்கின்றது என்றால் பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை புடுக்கித் திட்டானாம் அனுமான் என்பதைப் போல link எடுத்து வருவதாகப் போய்  டுiமெ  என்ற போர்வையில் எடுத்து வந்ததோ 4-5 போட்டோ தானா? அப்படிக் கூறிய Link எங்கே இதற்கு பேரவையே பதில் கூறுங்கள்


அவருடைய நிர்வாக முறைகேடுகளுக்கு பல உதாரணங்கள் உண்டு.
•    சேவையில் இணைய முன்பே துறைத் தலைமை பதவி!!!!
•    முதுமாணி மாணவியொருவருக்கு ஒழுக்கவிழுமியமற்ற முறையில் துறைத் தலைவி!!!!
•    Social Harmony என்ற பதவிக்கு வின்னப்பித்த ஒரு கலைத்தறை பட்டதாரியை ICICT க்கான      விரிவுரையாளராக ஒரே நாளில் நேர்முகத் தேர்வு நடத்தாமல் நியமித்தமை!!!
•    நேர்முகப் பரீட்சையில் துறை சார்த்த வினாக்களை விடுத்து அனாகரிகமான கேள்விகளை கேட்டது மட்டுமல்லாது இவரினால் தெரிவு செய்யப்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய கல்வி சாரா ஊழியர்களிடம் பிழையாக நடந்து கொண்டுள்ளார். என்பதையும் இங்கு குறிப்பிட்டு கொண்டுள்ளோம்.

•    அத்தோடு ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம் கனடாவில் 01.05.2010ல் கைதானது ஏன்?
•    01.05.2010 – 03.05.2010 வரை கனடாவில் எங்கே இருந்தீர்கள்.
•    05.03.2011 வரை நடந்தது என்ன?

 இவை அனைத்தும் எமக்கு தெரித்தவை. தெரியாத இன்னும் பல உள்ளமையினால் 28.01.2015 கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றுக்கு அமைய ஊழலுக்கு எதிரான விசாரனைக்குழுவினை உடனடியாக நியமிக்க வேண்டும் அவ்வாறு இடம் பெற்றால் இன்னும் பல ஆதாரங்களுடன் கூடிய ஊழல் மோசடிகள் வெளிவரும். கால தாமதம் ஏற்படின் கனேடிய ஊழலின் சிகரமான சுற்றுலா உபவேந்தர் சுற்றுலா இனிதே நிறைவேறியது சென்று வருகிறேன் என்று தான் உழைத்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார். எனவே உரிய தரப்பினர் எமது நியாயமான கோரிக்கையினை கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவிடம் கேட்டபோது "மாணவர்கள் எந்தவொரு கோரிக்கை தொடர்பாகவும் தமக்கு அறிவிக்கவில்லை. எனினும் எங்குமில்லாதவாறு அனைத்து மாணவர்களுக்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விடுதி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிகமான மாணவர்களுக்கு பஸ் வண்டிக்கான பருவகால சீட்டுப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஊழல் மோசடி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்படுவதை  வரவேற்கிறேன் என்றார்"