கிழக்கு மாகாண சபைக்கு விரைவில் மு.கா. முதலமைச்சரை நியமிக்கும் -ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாண சபைக்கு சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சில தினங்­களில் முத­ல­மைச்­சரை நிய­மிக்கும். எமது இந்த ஆட்­சி­யுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து வரு­மெ­னப் பெரு ஆர்வம் கொண்­டுள்ளோம்.
என நகர அபி­வி­ருத்தி, நீர் வழங்கள் வடி­கா­ல­மைப்பு அமைச்­சரும், சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கிழக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்தல் நடை­பெற்று ஆட்­சி­ய­மையும் போது
 ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புடன் முஸ்லிம் காங்­கிரஸ் செய்து கொண்ட ஒப்­பந்தம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிக
 உறு­தி­யா­க­வுள்ளார்.
இதன்­படி இன்னும் சில தினங்­களில் முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகா­ண­ச­பைக்­கான புதிய   முத­ல­மைச்­சரை நிய­மிக்­க­வுள்­ளது.


அத்­துடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசிய கட்சி முத­லான கட்­சி­க­ளுக்கு அமைச்சர் பத­வி­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
புதிய அரசின் நல்­லாட்­சிக்­கான எடுத்­துக்­காட்­டாக தேசிய அர­சாங்கம் போன்ற கட்­சி­களை இணைத்­த­தாக கிழக்கு மாகா­ண­சபை ஆட்­சியை அடுத்த இரண்­டரை ஆண்­டு­க­ளுக்கும் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.
இதன் மூலம் தேசிய அர­சாங்க ஆட்­சியை முதலில் கிழக்கில் நிறு­விக்­காட்டும் வாய்ப்பு எமக்கு கிடைத்­துள்­ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் எம்­முடன் இணைந்து வர­வேண்­டு­மெனப் பெரும் ஆர்­வத்­துடன் உள்ளோம்.
புதிய அர­சியல் கலா­சா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் ஆட்சியை கிழக்கில் அடுத்து வரும் இரண்டரை வருடங்களுக்கு மலரச் செய்வதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பங்கு கொள்ளுமென்ற நம்பிக்கையுள்ளது என்றார்.