வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலை

(படுவான் பாலகன்) வரவு செலவு திட்டத்தில் இதுவரை குறைக்கப்பட்ட பொருட்களின் விலை
  • பாண் விலை 6 ரூபாவால் குறைப்பு 
  • மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு  
  • மாசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
  • டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு
  • கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
  • நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
  • குரக்கன் மா ஒரு கிலோவின் விலை 12 ரூபாவால் குறைக்கப்படும் 
  • சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
  • 400கிராம் பால்மா விலை 325 ரூபாவாகும்
  • சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
  • நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைக்கப்படும்
  • மண்ணெண்ணெய் விலை மேலும் 6 ரூபாவால் குறைக்கப்படும்
  • ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா
  • விவசாயிகளின் நலன் கருதி பசும்பாலின் விலை 10 ரூபாவாக உயர்த்தப்படும்
  • விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்
  • தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும்
  • கற்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
  • வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்  
  • தனியார் நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்படும். எனவே தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு

  • யுத்தத்தில் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகையுடன் கூடிய 5 இலட்சம் கடன் கொடுப்பனவுகள் 
  • மாபொல புலமைப்பரிசில் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்  
  • பாவனையில் இருந்த அரச வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்
  • கையடக்கத் தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்யும் அட்டைகளுக்கு காணப்பட்ட 25 சதவீத முற்றாக நிராகரிப்பு  
  • விளையாட்டு நிகழ்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதான வரி 1000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு 
  • திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு
  • கசினோ வியாபாரிகளுக்கு 1000 வீதம் வரி
  • மதுவரி இரு மடங்கு அதிகரிக்கப்படும்  
  • சீமெந்து விலையை 90 ரூபாவால் குறைக்க எதிர்பார்கின்றோம்
  • மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்களுக்கான வரி முற்றாக நீக்க தீர்மானம்
  • அதிகமான நிறுவனங்கள் மீதான வரியை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க தீர்மானம்
  • வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 15 வீதத்தால் குறைக்க தீர்மானம்
  • இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கேஸ் 300 ரூபாவால் குறைப்பு
  • கைத்தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்
  • அனைத்து வங்கிகளும் நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் தமது கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்
  • கைத்தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்
  • வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு செலுத்தப்படும் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் குறைப்பு
  • கடன் அட்டைகளுக்கான வரி நூற்றுக்கு 8 வீதத்தால் குறைப்பு  
  • ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் மிஹின் லங்கா விமான சேவை இணைக்கப்படும்
  • சுகாதாரத்துக்கு 3 வீதம் ஒதுக்கீடு
  • கல்விக்கு 6 வீதம் ஒதுக்கீடு
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு பஸ் கட்டணம் 50 வீதத்தால் குறைப்பு  
  • மத்திய தர வர்க்கத்தினர் 250 ரூபா கொண்டு வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்
  • நெல்லிற்கான நிர்ணய விலை 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.