முதலமைச்சுப் பதவியினை விட்டுக் கொடுக்க தயாரென தெரிவித்தோம் ! மு.கா எம்மை உதாசீனப்படுத்தியது

கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்திற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இத்தனை காலமும் ஐக்கிய மக்கள் சுதந்திர
 கூட்ட மைப்பிடம் இருந்த கிழக்கு மாகாண அதிகாரம் இம்முறை ஜனாதிபதி தேர்தல் மாற்றத்துடன் நிலை குலைந்துள்ளது. இப்போது எம்மால் கிழக்கின் ஆட்சி யினை கைப்பற்றுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனினும் கிழக்கு மாகாண முதல மைச்சர் பதவியை யாருக்கு வழங்குவதென்பதில் தற் போது இழுபறி நிலைமையொன்று உருவாகியுள்ளது.


அதாவது கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சுப் பதவி வேண்டுமென தெரிவிக்கின்றனர். ஆனால் இம்முறை எம்மால் முதலமைச்சுப் பதவியினை விட்டுக் கொடுக்க முடியாது.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாமாகவே முன்வந்து கிழ க்கு மாகாண சபையின் முதலமைச்சுப் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுத் தருவதாக கூறி எம்முடன் இணைந்து ஆட்சி அமைக்க வரும்படி குறிப்பிட்டோம். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை விமர்சித்து தனித்து போட்டியிட்டு 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. மறுமுனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வழமை போல் தனித்து போட்டியிட்டு 11 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

இவ்வாறானதொரு நிலையில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாதிருந்த நிலையில் நாம் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராகி கிழக்கு மாகாண சபையில்ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தோம். முதலமைச்சுப் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு தயாரென பகிரங்கமாகவே மேடைகளில் தெரிவித்தோம். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் விட்டுக் கொடுக்க தயாரென தெரிவித்தோம். எனினும் அப்போதைய அரசாங்கத்தை விமர்சித்து வாக்கு களைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலின் பின்னர் மீண்டும் அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கின் ஆட்சியை இணைத்துக் கொண்டது.

கிழக்கு மாகாண சபையில் அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைக்கக் கூடாது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்காக இருந்தது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது கரு த்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எம்மை உதாசீனப்படுத்தியது. அப்போது இரண்டரை வருட கால முதலமைச்சுப் பதவி ஒப்பந்தத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்புடன் ஆட்சியினை அமைத்துக்கொண்டது.

அத்தோடு முதலமைச்சுப் பதவியினை நாம் இன ரீதியாக நோக்கவில்லை. கட்சி ரீதியாகவே பார்க்கின்றோம். கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முஸ் லிம் மக்களும் வாக்களித்துள்ளனர். அவர்களின்
நம்பிக்கையினையும் நாம் வென்றெடுத்துள்ளோம். எனவே எமது பக்க நியாயங்களை நாம் இன ரீதி யாக முன்வைக்கவில்லை. கட்சி ரீதியாகவே முன்வைத் துள்ளோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை மாகாண ரீதியாக நாம் அவதானித்தால் முன்னிலை பெற்றது நாம் தான். அதேபோல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விடவும் 6000 வாக்குகளே அதி கமாக ஐக்கிய மக்கள் தேசிய சுதந்திர முன்னணி பெற்றது.

மேலும் அப்போதைய கிழக்கு மாகாண சபையின் ஆட் சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டரை வருட கால முதலமைச்சுப் பதவியையும் இரண்டு மாகாண அமைச்சுப் பதவியினையும் வகித்தது. இப்படியானதொரு நிலையில் தற்போது புதிய அரசாங்கத்தின் மாகாண சபையில் முதலமைச்சுப் பதவியினை பெற்றுக்கொள்வது எமது கடமையே. நாம் இப்போது கிழக்கு மாகாண சபையின் முதல மைச்சுப் பதவியினை கோருவதும் எமது நிலைப் பாடும் எமது இலக்கும் நியாயமானது. இவை இன ரீதியானதோ நீதியானதோ அல்லது நியாயத்திற்கு அப்பாற்பட்டதோ அல்ல.
எனவே கிழக்கு மாகாண சபையின் பிரச்சினைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியாயப்பாடு எமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடமும் பேசி எமது நிலைப்பாட்டினை தெரிவித் தோம். கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தில் எமக்கு முதலமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் விளக்கியிருக்கின்றோம். அதற்கான சரியான நியாயங்களை சரியான தரவுகளுடன் முன் வைத்திருக்கின்றோம். எனவே எமது நிலைப்பாடுகளின் உண்மைத் தன்மையினை ஜனாதிபதி விளங்கிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சுப் பதவியினை எமக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.