வாழைச்சேனை நாவலடியில் பிரதியமைச்சர் அமீர் அலி ,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு வரவேற்பு

( ஜே.எப்.காமிலா  பேகம் )
இன்று 2015/01/30   வெள்ளிக்கிழமை   வாழைச்சேனை,  நாவலடி  தொகுதி  மக்களினால்  வீடமைப்பு  மற்றும் சமூர்த்தி  பிரதியமைச்சர்   அமீர் அலி அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை  அமைச்சர்   ரிஷாட்  பதியுதீன்  அவர்களுக்கும் வரவேற்பு  வைபவம்  ஒன்று  இடம்பெற்றது.இந்நிகழ்வில்  பெரும்பாலான  மக்கள் கலந்து  கொண்டு  இரு  அமைச்சர்களையும்   அமோகமாக  வரவேற்றதுடன்    பல  மகஜர்களையும்  கையளித்தனர்.



இந்நிகழ்வில்  உரையாற்றிய   அமீர் அலி  அவர்கள்
"வறிய  மக்கள்  அனைவருக்கும்  சமூர்த்தி  வழங்க  நடவடிக்கை  எடுப்பதாகவும்,  இனிமேல்  இப்பகுதி   வாழ்  மக்களுக்கு  இராணுவ  கெடுபிடிகள்  ஏற்படாமல்    காணிப்பிரச்சினைகளை  தீர்ப்பதுடன், வீடுகளும்  கட்டிக்கொடுப்பதற்கு  பொராடுவேன், இனிமேல்  மக்கள்  பயப்படத்   தேவை  இல்லை"  எனக்கூறினார்

 மேலும் அவர் "இராணுவத்தினரால்  நாவலடி  மக்களுக்கு    காணி ,வீடு  சம்பந்தமான   உரித்துரிமைப்பிரச்சினை   வரும்போது  அந்த  இடத்தில்  மக்களுக்காக,மக்களுடன்  இராணுவத்துக்கு   எதிராக  போராடத்தயாரக  உள்ளேன் " எனவும்  வாக்குறுதியளித்தார்.

இதில்  உரையாற்றிய  அமைச்சர்  ரிஷாட்  பதியுதீன்  அவர்கள்:
"அமைச்சர்  அமீர்  அலி  அவர்கள்  எப்போதும்  ஊரைப்பற்றியும்,  ஓர்  மக்கள்  பற்றியும்  சிந்தனையுடன்  இருந்தார்,இப்பிரச்சினைகளை  உடனடியாக   தீர்க்க  முடியாவிட்டாலும்    ஊருக்கு    அமைச்சர்  என்ற வகையில்  விரைவில்   இப்பிரச்சினைகளுக்கு  தீர்வு  கான  நடவடிக்கைகளை  முன்னெடுப்பார்  " எனக் கூறினார்.