மீராவோடை அல்-ஹிதாயாவின் 20ஆவது விளையாட்டு விழா

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 20ஆவது மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டியும், பாடசாலையின் புதிய அரங்கு திறப்பு விழா நிகழ்வும் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமூர்த்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும், கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், பிரதித்தவிசாளர் ஏ.எம்.நௌபர், மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜந்திரன், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.நஸீர், முன் பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஜெமிலுந்நிஸா, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி ஏல்.எல்.மீராசாஹிப், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரி எச்.எம்.எம்.றுவைத், அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர். 

மூன்று இல்லங்கள் இப்போட்டி நிகழ்வில் பங்குபற்றின. கமரியா பச்சை நிற அணி 547 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், சம்சியா நீல நிற அணி 601 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தினையும், நஜீமியா சிவப்பு நிற அணி 653 புள்ளிகள் அடிப்படையில் 52 மேலதிகப் புள்ளிகளால் இரண்டு இல்லங்களையும் வெற்றி பெற்று முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது. 

இதன் போது, மூன்று இல்ல மாணவர்களது அணி நடை, கயிறிழுத்தல், அஞ்சல் ஓட்டம், ஆரம்பப் பிரிவு மாணவிகளது உடற்பயிற்சி நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் வாழ்க்கைப் படாத வாலிபர்களுக்கும் வாழ்கைப்பட்டோருக்குமான கயிறிழுத்தல் போட்டியும் இடம் பெற்றது.