கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வேள்ட் விஷன் 85 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு வேள்ட் விஷன் நிறுவனத்தினால் சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பூலாக்காடு, கோராவெளி, திகிலிவட்டை, பாலையடித்தோனா, முறக்கொட்டாஞ்சேனை, குடும்பிமலை, முறுத்தாணை, பேரில்லாவெளி போன்ற கிராம மக்கள், விஷேட தேவையுடை மற்றும் போசாக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

வேள்ட் விஷன் கிரான் பிராந்திய முகாமையாளர் திருமதி இந்து ரோகாஸ் தலைமையில் நடைபெற்ற இநிகழ்வில் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,  வேள்ட் விஷன் கிரான் பிராந்திய இணைப்பாளர்களான ஜே.ஆர்.அகிலானந்தன், சுசான் வாத்லட், எஸ்.வெஞ்சமின், ஜு.உமாகரன், திருமததி கவிதா தர்மகுலராஜா மற்றும் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோதர்களும் கலந்துகொண்டனர்.