கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரைக்கும் தீர்வு எட்டப்படவில்லை - மாணவர் தலைவர் கோரிக்கை

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரைக்கும் தீர்வு எட்டப்படவில்லையென   கிழக்கு பல்கலைகழக மாணவர் தலைவர் பிரின்ஸ் தேவசுதன் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  30.01.2015 பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இவ்வாறு கருத்துதெரிவித்தார். 


அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்;

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுவதற்கு காரணம்; கடந்த பேரவையில் இருந்த ஊழல் மிக்க பேரவை இரு உறுப்பினர்களையும் 2015ம் ஆண்டு பேரவையில் நியமித்துள்ளமை பிரச்சினையான விடயம்.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் சிசிரிவி கமெரா பொருத்தி மாணவர்களை ஒரு அடிமைகளாக வழி நடுத்துகின்றார்கள். 

உபவேந்தர் அளித்த வாக்குறுதிகளை இற்றைவரைக்கும் நிறைவேற்றவில்லை, 

1. கடந்த வருடம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 4 மாணவர்களுக்குரிய நீதிமன்ற வழக்கை இற்றைவரைக்கும் தள்ளுபடி செய்வதற்குரிய முயற்சிகள் எடுக்கவில்லை. அதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உழச்சலுக்கும் தங்களின் படிப்பில் ஆர்வம் செலுத்தாமை இருக்கின்றார்கள்.

2. கிழக்கு பல்கலைக்கழத்திற்கு வெயியிலுள்ள தன்னாமுனை விடுதியிலுள்ள மாணவர்களை ஜனவரி 15ம் திகதி முன்னர் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை மாணவர் விடுதிக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தனர் எதுவும் இற்றைவரைக்கும் நடைபெறவில்லை.

இவ்வாறன குறைபாடுகளை உபவேந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட நிருவாக அதிகாரிகள் உடனடியாக தீர்வைப் பெற்றுதரவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். 

அத்துடன் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஆணைக்குழு திணைக்களம் கிழக்கு பல்கலைக்கழத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பான விசாரணையை முதன் முதலாக ஆரம்பிக்கவேண்டும் என்றும் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வைக்; காண முடியாததொரு ஆளாகவே நாற்காலியில் வெறும் ஆளாகயிருக்கின்றார். 

உபவேந்தரை நீக்குவதை விட உபவேந்தருக்கு தகதியான ஒருவர் தான் அவ்விடத்திற்திற்கு தேவை என நாங்கள் கூறுகின்றோம்.  

பேரவை ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பேரவை உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கையை ஊடகத்தில் வெளியிட்டமை தொடர்பாக மாணவர் ஒன்றியத்திற்கு மான நஸ்ட ஈடாக 10 மில்லியன் ரூபாய் கோருவதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இச் செயற்பாட்டால் மாணவர் ஒன்றியம் மன உளச்சலுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

கவனயீர்ப்பு போராட்டத்தை முற்றுமுழுதாக முன்னெடுத்தது மாணவர்கள், மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு பிரச்சினை என்று தெரிவித்ததும் மாணவர்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து செய்தார்கள் என மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.