கிழக்கு பல்கலைகழக கலைகலாசார பீட விரிவுரைகள் ஆரம்பிப்பது தொடர்பான மீள் பரிசீலணை

(சித்தாண்டி நித்தி) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  30.01.2015 பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து கலைகலாசார பீட மாணவர்கள் மன்னிப்பு கோரும்வரை குறித்த பீட மாணவர்களுக்கு விரிவுரைகள் நடாத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை (30) கலைகலாசா பீட ஆசிரியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கலைகலாராச பீடம் எடுத்த முடிவை  மீள் பரிசீலணை செய்யுமாறு கலைகலாசார பீடாதிபதியைக் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்துதெரிவிக்கையில்;

நடைபெற்ற கவனயீர்;ப்பு போராட்டத்தில் குறிப்பட்ட ஒரு சில ஆசிரியர்களினால் அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிட்டு நடாத்தப்பட்ட போராட்டமெனவும். 

ஆகவே எந்த வகையிலும் ஏழை மாணவர்களை பலிவாங்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாடிதொன்று மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் ஏற்கொள்ளவில்லை ஏற்கவும்மாட்டார்கள்.  

எந்தவொரு காரணங்களுக்காகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதையோ, பின் தள்ளப்படுவதையோ அனுமதிக்க முடியாது. 

அந்தவகையில் கலைகலாசார பீட ஆசிரியர்கள் எடுத்த முடிவை மீள் பரிசீலணை செய்யுமாறு குறித்த பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும். 

குறித்த விடயம் சம்பந்தமாக தங்கள் கலைகலாசார பீடவையை அழைத்து மாணவர்களின் விரிவுரை ஆரம்பிப்பது தொடர்பான முடிவொன்றை எடுக்கயிருப்பதாகவும் உபவேந்தருக்கு உறுதியளித்துள்ளதாக உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.