கோத்தபாய ராஜபக்ச கோடிக்கணக்கான ஆயுதங்களை கப்பலிலே வைத்திருந்துள்ளார். அதற்கு இன்னும் விசாரணையில்லை.

எங்களது நாட்டிலே எத்தனையோ சொத்துக்களை உயிர்களை இழந் இருக்கின்றோம் ஆனால் கல்வியை நாங்கள் இழக்கக் கூடாது அதனை நாங்கள் எங்களது கரங்களில் வைத்திருக்க வேண்டும். எமது சொத்துக்களை அழித்தொழித்த அரசாங்கம் இன்று எங்கவென்றும் தெரியாமல் சென்றுள்ளது.

என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை விஸ்ணு வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை தலைமையில்  இடம் பெற்ற விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

மன்னார் ஆயர் கூறியிரக்கின்றார் கடந்த யுத்தத்தின் போது விஸ்வமடு பிரதேசத்தில்; முப்பத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் கிடந்ததாக கூறியிருக்கின்றார். இவ்வாறு மக்களை கொன்றொளித்த அறாஜக ஆட்சி தற்போது மறைந்து ஒரு ஜனநாயக ஆட்சி உருவாகி இருக்கின்றது.

கடந்த காலத்தில் ஒரு தமிழ் மகனிடம் வேட்டைத்துப்பாக்கி இருந்தால் கூட எந்தவித விசாரணையுமின்றி எத்தனை வருடம் வேண்டும் என்றாலும் அடைத்து வைக்கக் கூடிய ஆட்சியே காணப்பட்டது. இவற்றிக்கெல்லாம் காரணமாக அமைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று கோடிக்கணக்கான ஆயுதங்களை எவருக்கும் தெரியாமல் கப்பலிலே கடலிலே  வைத்திருந்துள்ளார். சர்வதேச மகநாட்டு மண்டபத்தினுள்ளே வைத்திருந்தார்கள். இதுவரை இவர் விசாரிக்கப்படமல் இருக்கின்றார். தமிழருக்கு நீதி மற்றவருக்கு ஒரு நீதியா? என நான் கேட்க விரும்புகின்றேன். ஜனநாயக ஆட்சி என்றால் கடந்த அரசாங்கத்தில் தப்பு செய்த எந்த அதிகாரியாக இருந்தாலும் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும்.

எமது மக்கள் எதிர்பாக்கின்ற அரசியல் அபிலாசைகள் நிறைவு செய்ப்பட வேண்டும், நீதி கிடைக்க வேண்டும், மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் அபிவிருத்தியை நாங்கள் காணவேண்டும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரிய பாதையில் பயணித்தக் கொண்டு இருக்கின்றது.

இதனுடன் மக்கள் அனைவரும் இணைத்து பயணிக்க வேண்டும் இந்த நாட்டிலே வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களுக்கு நடந்த அனியாயங்களைத் தடடிக் கேட்பதற்காகவும், தண்டிப்பதற்காகவும், நீதியினை பெற்றுத் தருவதற்காவும் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளிவர வந்த நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது.

எது நடந்தாலும் எங்களது மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெற்றே ஆகவேண்டும் ஐ.நா அறிக்கை பிற்போடப் பட்டமைக்காக  யாழ்ப்பாணத்திலே போராட்ங்கள் நடாத்தப்படுகின்றன. அதற்காக கிழக்கு மாகாணத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம். என்பதைச் சிந்திக்க வேண்டும். அதற்கான ஆதரவினை நாங்கள் அனைவரும் வழங்க வேண்டும் அதற்காக மக்கள் அனைவரும் எங்களுடன் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்