தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட கல்குடா கல்வி வலய உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கவில்லை

ஜனாதிபதித்தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட கல்குடா கல்வி வலயத்தினைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய படிகளுக்கான கொடுப்பனவுகளை இன்னமும் தேர்தல்கள் திணைக்களம் வழங்கவில்லை என்று கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
2லட்சத்து 86ஆயிரத்து 390 ரூபா இதற்குத் தேவையாகவுள்ளதாகவும் அதனை வழங்குவதற்கு தங்களிடம் பணம் இல்லாமையால் கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நிறைவு பெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற போதும் தங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்து உத்தியோகத்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பில் தேர்தல்கள் திணைக்கள் மாவட்டக்காரியாலயம், தலைமைக்காரியாலயம் என்பவற்றுக்கு அறிவித்துள்ளேன். இருப்பினும் அதற்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை.
அதனால் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட 73 உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.