கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. பஷீர் சேகுதாவூத்

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. ஆட்சிக்காலத்தை பிரித்தே ஆளவேண்டுமென முன்னாள்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான சேகுதாவூத் பஷீர் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு – ஏறாவூர் றூபி முகைதீன் மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட ஐம்பது நிரந்தர வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


 அவர் இங்கு மேலும் பேசுகையில்-- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனாதிபதியின் தெரிவில் பாரிய பங்களிப்புச் செய்திருக்கின்றது. அக்கட்சி இவ்வளவு காலமும் மத்திய அரசு என்பது எங்களுக்குரியதல்ல. அதுசிங்கள பேரினவாதிகளுடைய கிறுக்கல்  என்றுகூறி சுதந்திரத்திற்கு பிற்பட்ட நீண்டகாலத்தில் விஷேடமாக 78ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டகாலம் தொடக்கம் இன்றுவரை இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் தமக்கு உடன்பாடே கிடையாது என்று தூக்கி எறிந்துவிட்டு பாராளுமன்ற அரசியலில் என்றுமே எந்த அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வடகிழக்குப்பகுதி எங்களுடைய தாயகம் என்ற கோட்பாட்டோடு செயல்பட்டுவந்த அமைப்பாகும். இந்தமுறைமை தமிழ்த் தேசியத்தின் மிகவும் உறுதியான நிலைப்பாடு.

 ஆனால் தமிழ் இனம் தற்போது இலங்கையினுடைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் எங்களுடைய பங்கு பிரதானமானது. மத்திய அரசு எங்களுக்கும் சொந்தமானது என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறது.

 இச்சூழ்நிலையில்,   கிழக்கு மாகாணத்தில் சமமான விகிதாசாரத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சமமாக வாழ்கிறோம்.
 எங்களுடைய கட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கிடையில் பெறும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி. அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பெறும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியாகும். இந்த இரண்டு கட்சிகளில் எந்தக்கட்சியும் ஒரு சிங்கள பெரும்பான்மைக்கட்சியோடு சேர்ந்து மத்திய அரசாங்கத்தில் ஆட்சி அமைப்பது போன்று கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது ஆபத்தானதாகும்.

 கிழக்கு மண் தமிழ் பேசும் மக்களை பெறும்பான்மையாகக்கொண்ட மண். இந்த மண்ணிலே பலவிதமான பிரச்சினைகள் தமிழ் பேசுகின்ற இரண்டு இனங்களுக்கும் இருக்கிறன. ஆனால் இன்று முதலமைச்சர் என்ற ஒருபதவி நிலையை வைத்துக் கொண்டு முரண்படுவோமேயானால் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிங்கள மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களும் இன்னும் சில முஸ்லிம் உறுப்பினர்களும் சேர்ந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பாளர்கள். அவ்வாறாயின்,அடுத்த நூறு ஆண்டுகளுக்கு கிழக்கு மாகாண சபை உயிர்வாழும் என வைத்து;க்கொண்டால்  ஒருகாலமும் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வரமுடியாது என்றும் தவிசாளர் சேகுதாவூத் பஷீர் சுட்டிக்காட்டினார்.

 ஆகவே இருகட்சிகளும் அந்த முதலமைச்சர் பதவியை பிரித்துக் கொள்ளவேண்டும் என்பதுவே எனது அபிப்பிராயமாகும்.

தபால் அதிபர் ஏஎம் நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜேகநாதன், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்ஐ தஸ்லிம், உறுப்பினர்களான அமீன்இஸ்ஸத் ஆஸாத், எம்;N;ஜஎம் முஸ்தபா, மற்றும் ஏஆர் பிரவுஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள்  வடக்கு – கிழக்கு மாகான சபை உறுப்பினருமான மர்ஹூம் றூபி முகைதீனின் பெயர் இக்கிரமத்திற்கு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்