பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழித்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு


(சிவம்)

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் சிறுவர்வன்முறைகள் கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூல் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது.

தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை சிறுவர்கள் என கடந்த 2014 முதல் இதுவரை 65 விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டதாக தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன் தெரிவித்தார்.

09 மாவட்டங்களில் உள்ள 08 வைத்தியசாலைகள், 06 பொலிஸ் நிலையங்களில் குறித்த அமைப்பின் அலுவலகம் செய்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் த. சங்கீதா, உளவளத் துணையாளர் பி. ஜெயதீபா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் தடுப்பதற்கான பொறிமுறைகள் அடங்கிய நூல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருளாளினிக்கு அமைப்பின் இணைப்பாளர் த. சங்கீதா மற்றும் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.