கல்குடாவில் நடைபெற்ற பால் நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு!

மட்டக்களப்பு கல்குடாவில் பால் நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு நேற்று திங்கள் கிழமை(23)தேவை நாடும் மகளிர் அமைப்பினரினால் கல்குடா பொலிசாரின் பங்களிப்புடன் நடைபெற்றது.


கல்குடா பல நோக்கு மண்டப கட்டிடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக நவரெட்ன, தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரனி திருமதி அருள்வானி சுதர்சன் திட்ட இணைப்பாளர் அபிராமி ஜெயச்சந்திரன்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி.சங்கீத தர்மரஞ்சன் மற்றும் கிராம சேவகர் ஜெ.லோபனராஜ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இவ் கருத்தரங்கில் பேத்தாழை வினாயகபுரம் கல்குடா கல்மடு போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் இரு பாலரும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது வீட்டு வன்முறைகளை தடுக்கும் முகமாக ஆண்கள் பெண்களுக்கிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வு நீக்கப்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குதல்,
பால் நிலை சமத்துவத்தினை பேனும் முகமாக ஆண்களுக்குள்ள அதிகாரம் பெண்களை கட்டுப்படுத்துவதானால் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைகளினால் தங்களது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்படையும் சூழ் நிலையை எவ்வாறு தவிர்க்கலாம்  இதற்கு ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே பால் நிலை சமத்துவம் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்ற தொனிப் பொருளில் பல கருத்துக்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு உள வள துணையாளர்களினால் கூறப்பட்டது.