வடக்கு , கிழக்கு ரயில் சேவையில் நேரமாற்றம் ! புதிய நேர அட்டவணை முழு விபரம்

தலைமன்னார் தொடரூந்து (ரயில்) பாதை திறக்கப்பட்டதை அடுத்து கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரையான தொடரூந்து போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு அமைய வடக்கு கிழக்கு தொடரூந்து போக்குவரத்து அட்டவணை நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,


கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.15 இற்கு சேவையை ஆரம்பிக்கும் நகரங்களுக்கு இடையேயான கடுகதி அஞ்சல் சேவை, மறுநாள் அதிகாலை 4.12 இற்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து காலை 7.30 இற்கு சேவையை ஆரம்பிக்கும் உதயதேவி கடுகதி, மாலை 4.30 அளவில் கொழும்பு கோட்டையை வந்தடையும், 

இரவு 8.30 இற்கு மட்டக்களப்பில் இருந்து புறப்படும் நகரங்களுக்கு இடையேயான அஞ்சல் கடுகதி மறுநாள் காலை 5.10 அளவில் கோட்டை தொடரூந்து நிலையத்தை வந்தடையும், 

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து இரவு 9.45 இற்கு புறப்படும் இரவு நேர அஞ்சல் தொடரூந்து மறுநாள் காலை 5.45 மணியளவில் திருகோணமலையை சென்றடையும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு 7.10 இற்கு திருகோணமலையில் இருந்து பயணிக்கும் இரவு நேர அஞ்சல் தொடரூந்து மறுநாள் அதிகாலை 3.45 இல் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தை வந்தடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.15 அளவில் புறப்படும் உதய தேவி கடுகதி தொடரூந்து  4 மணியளவில் மட்டக்களப்பை சென்றடையும் என தொடரூந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து இரவு 8.40 இற்கு புறப்படும் அஞ்சல் தொடரூந்து மறுநாள் காலை 6.05 அளவில் சுன்னாகத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7.40 இற்கு சேவையை ஆரம்பிக்கும் கடுகதி தொடரூந்து மறுநாள் அதிகாலை 4.25 இற்கு தலைமன்னாரை சென்றடையும்.


இந்த நிலையில் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் கல்கிசையில் இருந்து காலை 5.10 இற்கு புறப்படும் நகரங்களுக்கு இடையேயான கடுகதி தொடரூந்து கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து 5.45 அளவில் புறப்பட்டு மதியம் 12.20 அளவில் காங்கேசன்துறையை சென்றடையும்.

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து சுன்னாகம் வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி கடுகதி தொடரூந்து, கோட்டையில் இருந்து காலை 6.05 அளவில் புறப்பட்டு பிற்பகல் 2.35 அளவில் சுன்னாகத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து முற்பகல் 11.50 இற்கு புறப்படும் நகரங்களுக்கு இடையேயான உத்தரதேவி கடுகதி இரவு 6.45 அளவில் காங்கேசன்துறையை சென்றடையும்.

பிரதி சனிக்கிழமை தோறும் மாத்தறையில் இருந்து காலை 6.20 அளவில் சேவையை ஆரம்பிக்கும் கடுகதி தொடரூந்து முற்பகல் 9.20 அளவில் கொழும்பு கோட்டையை சென்றடைந்து மீண்டும் 9.40 அளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லும் குறித்த தொடரூந்து மாலை 6.55 நிலையத்தை சென்றடையும்.

மாத்தறையில் இருந்து முற்பகல் 9.40 அளவில் புறப்படும் ரஜரட்ட ரெஜின கடுகதி பிற்பகல் 1.15 இற்கு கோட்டையை சென்றடையும்.

இது பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து 1.45 இற்கு புறப்பட்டு இரவு 8.17 இற்க வவுனியாவை சென்றடையும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 3.55 அளவில், சேவையை ஆரம்பிக்கும் நகரங்களுக்கு இடையேயான கடுகதி சேவை 8.56 இற்கு வவுனியா சென்றடையும்.



சனிக்கிழமைகளில் மாத்திரம் அநுராதபுரத்தில் இருந்து நடுநிசியில் புறப்படும் கடுகதி தொடரூந்து அதிகாலை 4.45 அளவில் யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 8.50 இற்கு சேவையை ஆரம்பிக்கும் தொடரூந்து மாலை 5.45 மணியளவில் தலைமன்னாரை சென்றடையும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் இருந்து மாலை அதிகாலை 3.35 இற்கு புறப்படும் ரஜரட்டை ரெஜின கடுகதி தொடரூந்து காலை 10.13 இற்கு கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தை வந்தடையும்.

பின்னர் அது கொழும்பு கோட்டையில் இருந்து 10.30 இற்கு புறப்பட்டு 1.50 அளவில் மாத்தறையை சென்றடையும்.
யாழ்பாணத்தில் இருந்து காலை 6.30 இற்கு சேவையை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி மாலை 3.05 இற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ஞாயிறு தோறும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 9.10 இற்கு புறப்படும் கடுகதி தொடரூந்து 6.20 இற்கு கொழும்பு கோட்டையை  வந்தடையும்.

இதன் பின்னர் அது 6.25 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறையை இரவு 9.17 இல் சென்றடையும்.

காங்கேசன்துறையில் இருந்து காலை 9.40 இல் பயணத்தை ஆரம்பிக்கும் உத்தரதேவி நகரங்களுக்கு இடையேயான கடுகதி மாலை 4.35 இற்கு கோட்டையை வந்தடையும்.

காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.25இற்கு புறப்படும் நகரங்களுக்கு இடையேயான கடுகதி தொடரூந்து இரவு 8.31 இற்கு கல்கிசையை சென்றடையும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்பாணத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் இரவு நேர அஞ்சல் தொடரூந்து மறுநாள் அதிகாலை 4.17 இற்கு கோட்டையை வந்தடையும்.

இது தவிர, 10.15 இற்கு தலைமன்னாரில் இருந்து சேவையை ஆரம்பிக்கும் தொடரூந்து இரவு 7.17 இல் கோட்டை நிலையத்தை வந்தடையும்.

தலைமன்னாரில் இருந்து இரவு 10 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் கடுகதி தொடரூந்து மறுநாள் காலை 7.05 இல் கொழும்பை வந்தடையும் என தொடரூந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய நேர அட்டவணை தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தொடரூந்து போக்குவரத்து அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பெற முடியும்.