கிழக்கில் யுத்தமே நடக்கவில்லையா? மக்கள் பாதிக்கப்படவில்லையா? எல்லாரும் வடக்கிற்கு தான் செல்கிறார்கள்

"தலைமை பீடத்தில் உள்ளவர்கள் மட்டக்களப்பை ஒதுக்கி வைக்கும் மனப்பானமையை தான் நான் உணருகின்றேன் , இலங்கைக்கு வரும் எல்லாரையும் வடக்கிற்கு தான் கூட்டி செல்கிறார்களே தவிர கிழக்கிற்கு கூட்டி வருவது  குறைவு , பலர் நினைக்கிறார்கள் மட்டக்களப்பில் ஒன்றும் நடக்கவில்லை , மட்டக்களப்பு மக்கள் பாதிக்கப்படவில்லை , யுத்தமே நடக்கவில்லை என ஆனால் மட்டக்களப்பில் தான் யுத்தம் ஆரம்பத்தில் தொடங்கியது , முதன் முதலில் மட்டக்களப்பு தான் பாதிக்கப்பட்டது அதன் பின்பு தான் மற்ற இடங்களில் தொடர்ந்தது , இதை யாரும் பொருட்படுத்துவது இல்லை  
எங்களுடைய அரசியல் வாதிகள் இதை பற்றி சிந்திப்பதாயில்லை , கதைப்பார்கள் ஆனால் ஒன்றும் நடப்பதில்லை .
எங்களை பொருத்தவரை நல்ல தலைவர்கள் இல்லை , எல்லாரும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தான் அரசியலில் ஈடுபடுகிறார்களே தவிர மக்களுக்கு சேவையாற்றவில்லை

மட்டு. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா 

காணொளியை பார்க்க