சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் அமைச்சர் ஹசன் அலி

கூட்டுக் கட்­சி­களின் தேசிய அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக வேண்டும். நிலவி வரும் அர­சியல் சூழ்­நி­லைக்கு அமைய சம்­பந்தன் மட்­டுமே எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னவர்

சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலை­வ­ராக்­கினால் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கி ஆத­ரிப்­ப­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

 தேசிய அர­சாங்­கத்தின் கூட்­டணி ஆட்­சியில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்கும் நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே அக்­கட்­சியின் பொது செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் ஜன­நா­யகம் ஓர­ள­வேனும் பலப்­பட்­டி­ருக்­கின்­றது. சிறு­பான்மை மக்­களின் உரி­மை­க­ளுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் முன்­னு­ரிமை வழங்கி செயற்­ப­டு­கின்­றனர். எனினும் பாரா­ளு­மன்­றத்தில் இன­வாத பிர­தி­நி­திகள் இன்னும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இன்­றைய நடை­முறைச் சூழ்­நி­லைக்கு அமைய பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்சி எதிர்க்­கட்­சி­யாக வர வேண்டும். சிறு­பான்மை கட்­சி­களை பாரா­ளு­மன்­றத்தில் இருந்து வெளி­யேற்ற நினைக்கும் ஒரு­சில சிங்­கள கட்­சி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­தவும் சிறு­பான்மை தலை­மை­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்­தினை வழங்­கவும் இது நல்­ல­தொரு சந்­தர்ப்பம். அதேபோல் இன்று பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகளில் மிகவும் அனு­பவம் மிக்­க­வரும் இன­வா­தத்­தினை பேசாத ஒரே தலை­வரும் சம்­பந்தன் மட்­டுமே ஆவார்.
 
மேலும் சம்­பந்தன் எதிர்க்­கட்சி தலைவர் பொறுப்­பிற்கு மிகவும் பொருத்­த­மா­னவர். சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டவும் நாட்டின் தேசிய ஒற்­று­மை­யினை கட்­டி­யெ­ழுப்­பவும் இவ்­வா­றான தீர்­மா­னங்கள் வெற்­றி­ய­ளிக்கும். அதேபோல் இன­வாத செயற்­பா­டு­களில் இருந்து விடு­பட வேண்­டு­மாயின் தமிழ் தலைவர் ஒரு­வரை அதுவும் தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் வாய்ப்­புக்கள் அதி­க­மாக இருக்­கின்ற சம்­பந்­தனை நிய­மிக்க வேண்டும். இலங்கை வர­லாற்றில் தமிழ் தலைவர் அமிர்­த­லிங்கம் எதிர்க்­கட்சி தலை­வ­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார். அதன் பின்னர் ஏற்­பட்­டுள்ள ஒரு சந்­தர்ப்­பமே இது. எனவே அதனை பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.
 
மேலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனை சபாநாயகர் நியமிப்பாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பூரண ஆதரவினை வழங்க தயாராக உள்ளது. அதேபோல் சம்பந்தன் கூட்டணியுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படவும் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.