சிகிரிய கண்ணாடிச் சுவரில் எழுதிய சித்தாண்டி யுவதிக்கு இரண்டாண்டு சிறை!

சிகிரிய கண்ணாடிச் சுவரில் எழுதிய மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 வயதான சின்னத்தம்பி உதேனி என்னும் யுவதியே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.


தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த தமிழ் யுவதி, சுற்றுலா ஒன்றுக்காக அண்மையில் சிகிரிய சென்றிருந்த போது அங்கு காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்ணாடிச் சுவரில் “தங்ஸ் உதயா”    என  எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் அகழ்வாராய்ச்சி திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.  சேதப்படுத்தப்பட்ட பகுதியை மீளவும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியாது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த யுவதிக்கு தம்புள்ள நீதவான் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

சிகிரிய பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.