வெறும் சம்பளத்திற்காக அமைச்சுப்பதவிகளை பெற வேண்டுமா? இரா.துரைரெத்தினம்

வெறும்  சம்பளத்திற்காக   அமைச்சுப்பதவிகளை  பெற  வேண்டுமா?மேற்கண்டவாறு  தெரிவித்தார் கிழக்கு  மாகாணசபையின்   சிரேஸ்ட  உறுப்பினர்  இரா.துரைரெத்தினம்.கிழக்கு  மாகாணசபையின்  இன்றைய  நிலை  தொடர்பாக  கேட்டபோதே  இவ்வாறு  தெரிவித்தார்.
3  தடவைகள்  தமிழ்தேசிய  கூட்டமைப்பை  முஸ்லிம் காங்கிரஸ்   ஏமாற்றியுள்ளது.
முதலமைச்சர்  பதவி  கிடைக்கவில்லை.கல்வி  அமைச்சு  கிடைக்கவில்லை.காணி அமைச்சு  கிடைக்கவில்லை.கைத்தொழில்  அமைச்சு  கிடைக்கவில்லை.
ஏன்  சுகாதார  அமைச்சையும் ,விவசாய  அமைச்சையும்  ஏற்கவேண்டும்?வெறும்  சம்பளத்திற்காகவா?
இன்று  திருகோணமலையில்  இடம்பெற்ற  தமிழ் தேசிய  கூட்டமைப்பின்  11  உறுப்பினர்கள்  இது  தொடர்பாக  பல  மணிநேரம்  ஆராய்ந்த  கூட்டத்தில்  நானும்   கோவிந்தன்  கருணாகரன(ஜனா);  உம்,ஞானமுத்து  கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமைல) உம்,இந்திரகுமார் பிரசன்னாவும்  முஸ்லிம் காங்கிரஸ்  இன்  அமைச்சு  பதவிகள்  தேவை  இல்லை  என  பல  தடவைகள்  கூறினோம்.தமிழரசுக்கட்சியின்  சில  உறுப்பினர்களும்  கூறினர்.ஆனால்  அமைச்சுப்பதவிக்கு  ஆசைப்பட்டவர்கள்  அமைச்சுப்பதவிகளை  நாளை  பொறுப்பேற்பதாக  கூறினர்.பொறுப்பேற்றால்  அந்த  நிகழ்விலும்   கலந்துகொள்ள  மாட்டோம்  எனவும்  கூறியுள்ளோம்.
இதையும்  மீறி   அமைச்சப்பதவிகளை  பொறுப்பேற்றால்  தமிழரசுக்கட்சி   அமைச்சுப்பதவிகளை  பொறுப்பேற்றுள்ளது  என்ற   முடிவுக்கு வருவோம்.
மக்கள்  எங்களுக்கு  வாக்களித்தது   இதற்காக  அல்ல   எனவும்  அவர்  சுட்டிக்காட்டினார்.