மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் சற்று முன்னர் கார் விபத்து



(பிறின்ஸ் ) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பெரியநீலாவணையில் கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பாதையை விட்டு விலகி எதிர் பக்கமாக உள்ள மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து பொலிசார் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.