முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணர் வித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணர் வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த திறனாய்வு மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) பாடசாலையின்   அதிபர் ரி.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது .


நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜாசிங்கம், கௌரவ விருந்தினராக கோறளைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணலிங்கம், சிறப்பு விருந்தினர் உடல்கல்விப் பணிப்பாளர் சுபாஸ்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம். 
நிகழ்வுக்கு அதிதிகள் அழைக்கப்பட்டதும் ஒலிம்பிக் தீபமேற்றலுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மைதானத்தை அலங்கரித்த வண்ணமாகää ஒவ்வொரு இல்லங்களுக்கும் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அலங்கரிக்கபட்ட இல்லங்களின் வடிங்களின் வர்ணனை மைதானத்தை அலங்கரித்தது. 

பாடசாலையில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு என்றாலே மாணவர்களுக்கு மகிழச்சியான நிகழ்வாக எடுத்து கொள்வது மட்டுமின்றி மாணவர்களும் தங்களின் திறமைகளை வெளிக்காட்ட தவறுவதில்லை அந்த வகையில் தமது திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டி தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

பாடசாலை மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட முடியாது காரணம் மைதானத்தின் அருகில் சடலங்களை நல்லடக்கம் செய்யும் மயானம் ஒன்று உள்ளது. மைதானத்திற்கு சுற்றுமதில் இல்லைää தற்பொழுதும் மாணவர்கள் கொட்டில்களில் தான்; கல்வி கற்பதாகவும்ää பாடசாலைக்குரிய இடவசதியில்லைää கட்டட வசதியில்லை எனவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை முன்வைத்துள்ளார்.