மண்டூர் விஷ்ணு விளையாட்டுக் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்

(சமி)மண்டூர் விஷ்ணு விளையாட்டுக் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவு விழா 18 சனிக்கிழமை பி.ப.2.30 மணியளவில் கழகத்தலைவர் க.முகுந்தன் தலைமையில்  விஷ்ணு விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்ட பின்னர் மங்கல விளகேற்றப்பட்டு தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. தொடர்ந்து வரவேற்பு உரை நிகழ்தப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிகமாக  விளையாட்டு விழாக்களில் மாணவர்களின் கல்வி ஊக்குவிற்பினை முன்நிலைப்படுத்தி மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் பரிசிப்பொதிகளை மட்டக்கப்பில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் வழங்கிவருவதாகவும் எமது மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர் தரப்பரீட்சையில் மருத்துவபீடத்திற்கு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும்  இலங்கையில் 6ஆம் இடத்தினையும் ஒரு மாணவன் பெற்றுள்ளார் இது அந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் விடாமுயற்சியும் பெற்றோர்களின் ஊக்கமுமே என்றும் இந்த நாடு எமக்கு மட்டும் சொந்தமல்ல இங்கு வாழ்கின்ற அனைத்து இனங்களுக்கும் சொந்தமான நாடு என்றும் எம்முடைய சமுகம் இன்றல்ல நேற்ரல்ல சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் குறிப்பாக பிறிட்டீஸ் காலத்திலே  தமிழர்கள்தான் கூடுதலான உத்தியோகங்களைப் பெற்றிருந்தார்கள் என்றும் 1972ஆம் ஆண்டு இந்த நாட்டிலே சுயபாஷா முறை அமுல் நடத்தப்பட்டபின்  நாங்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கவேண்டியவர்களா இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்  கடந்த 10 ஆண்டு காலத்திலே இலங்கை அரசாங்கத்திலே உத்தியோகம் பார்க்கின்ற அந்த உரிமையற்றவர்களாக இருந்ததாகவும் ஏறக்குறைய 35 வருடகாலமாக எமது இனத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டதே தவிர எமது இனமக்கள் உரிமையுடன் வாழ்ந்தவர்களாகவோ உரிமையுடன் உத்தியோகம் பார்த்தவர்களாகவோ இருக்கவில்லை அவர்கள் உன்மையிலே அவர்கள் படிப்பதற்கு வசதியற்றவர்களாக வங்கர்களிலே ஒழித்துக்கொண்டு இருந்த ஒரு இனமாகத்தான் இருந்திருக்கின்றோம் என்பதை இவ்விடத்தில் சொல்லியாகவேண்டும். என்றும் உன்மையான சுதந்திரம் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை என்றும் ஏறக்குறைய 65 ஆண்டுகாலமாக தமிழர்களின் அபிலாசைகள் மறுக்கப்பட்ட காரணத்தினால் இன்றும் தீக்கப்படாமல் இருக்கின்றன இதனால் கடந்தகாலங்களில் தந்தை செல்வா அவர்களின்; தலைமையில் நாங்கள் அகிம்சையாக போரடினோம்  இதனை ஏற்க மறுத்த எமது இளைஞர்கள் ஆயுதக்கலாச்சாரத்தை மாற்றி ஆயுதம் மூலமாக எமது உரிமைகளை  வென்றடுக்கலாம் என துணிந்தார்கள் அதுவும் 2009ம் ஆண்டு மௌனித்தது அதன் பின்னர் எமக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பதை அறியும் பொருட்டு 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான் தலைவர்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டினார்கள் என்று தெரிவிததார்.

இந்த விளையாட்டு விழாவினை சிறப்பிற்கும் முகமாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்த ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ, மாணவிகளை பாராட்டி கௌரவித்தல் மற்றும் சமுகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மைதானத்தில் அனைவரையும் மகிழ்விற்கத்தக்க பல கலாச்சார  விளையபட்டுக்கள் நடைபெற்றன. இன் நிகழ்வில் பிரதம அதிதிகள், விசேட அதிதிகள் கௌரவ அதிதிகள் ஆன்மிக அதிதிகளாக பலர் கலந்து சிறப்பித்தனர்.