மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் 55 அவது ஆண்டு நிறைவு விழா



(சிவம்)

மட்டக்களப்பு றோட்டறிக் கழகத்தின் 55 அவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் பயனியர் வீதியில் அமைந்துள்ள அதன் மண்டபத்தில்  சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.

றோட்டறிக் கழகத்தின் நடப்பு வருடத்திற்கான தலைவர் றோட்டறியன் டொமிங்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

றோட்டறியன்களின் சத்தியப்பிரமாணம், 55 ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு, போல் ஹரிஸ் பட்டம் பெற்றவர்களின் அறிமுகம் என்பன இடம்பெற்றன.

சர்வதேச றோட்டறி பவுண்டேசனுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பிரதான நன்கொடையாளரான றோட்டறியன் வினோபா இந்திரன் மற்றும் தொழில் பயிற்சி வழங்கியதற்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் றோட்டறியன் எம். ரவீந்திரனுக்கு மேன்மை விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இதன்போது ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 1000 அமெரிக்க டொலர்கள் சர்வதேச றோட்டறி பவுண்டேசனுக்கு வழங்கியமைக்காக 27 றோட்டறியன்களுக்கு போல் ஹரிஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு , கல்முனை மாவட்டங்களிலுள்ள றோட்டறியன்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.