ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தாய்மாருக்கானசத்துணவு வழங்கி வைப்பு

(இஹ்திஸாம், அக்கரைப்பற்று)
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள தாய்மாருக்கானசத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (17)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரோக்கியமான தாய்மை மற்றும் வளமான எதிர்கால சமுதாயம் எனும் தொனிப்பொருளில்முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின்  மூலம் ஆரோக்கியமான மூளைப் பலமுள்ள சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கமைவாக சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிகழ்வில், இரண்டாயிரம் ரூபாய்பெறுமதியான சத்துணவு பொதிகள் 246 கர்ப்பிணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.



ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.முனவ்பர் தலைமையில்பிரதேச சுகாதார வைத்திய பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.ஜெகதீசன், பொதுச்சுகதார பரிசோதகர்களான ப.கேதீஸ்வரன்,எம்.மனோரஞ்சிதம், குடும்ப சுகாதார மருத்துவ தாதிகள்; உட்பட பலர் கலந்துகொண்டுசத்துணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
கருவுற்று 05 ஆம் மாதத்திலிருந்து குழந்தை பிறந்து 04 மாதங்கள் முடியும் வரையான 10 மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா வீதம் இருபதாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.