மூதுார் பிரதேச கங்கு வேலி படுகாடு முதலை மடு விவசாயிகள் தங்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஆர்பாட்டம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதுார் பிரதேச கங்கு வேலி படுகாடு முதலை மடு விவசாயிகள் தங்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் பெருன்பான்மை இனத்தவர்கள் வேளாண்மை செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்பாட்த்தில் கலந்து கொண்ட தமிழ் விவசாயிகள் முன்னாள் ஊர்காவல் படையினரே இந்த அத்து மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு அந்த பகுதியிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரும் பின்னனியில் இருப்பதாக குற்றம் சாட்டினர்
அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

எமது வயல் காணிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான அத்துமீறல்கள் இடம் பெற்று வருகின்றது.
 இது பற்றி பல முறை பொலிசாரிடம் முறையிட்டபோதும் நிரந்தரமான தீர்வு இதுவரை  கிடைக்கவில்லை 
. பொலிசார் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கணக்கில் எடுக்காமல்  சில முன்னாள் ஊர்காவல் படையினர் இந்த  அ்த்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

நேற்று ஞாயறுக்கிழமை  வயல்காணிகளுக்கச் சென்று பணிகளை செய்யச் சென்றபோது  பலர் முறையற்ற விதத்தில் அத்துமீறல் களில் ஈடுபட்டனர்.இதுபற்றி நேற்றுஞாயிறு மாலை மூதுார் பொலிசில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
.  இந்த நிலையில் நீண்டகாலமாக தொடரும் இந்த செயலை  செயலைக்கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
.
கடந்த இரு வருடத்திற்கு முன்பு காலங்களில் இவ்வாறான நபர்களால் நான்கு விவசாயிகள் தாக்கப்பட்டு   படுகாயமடைந்திருந்தனர்.
 இது பற்றி பொலிசாரிடம் முறையிட்டு விசாரணைகள் இடம் பெற்றன  கடநத 2009 இல் இப்பகுதியில் இருந்த புராதன அகத்தியர் வழிபட்ட சிவன் ஆலயத்தின்  சிவலிங்க
மும் உடைக்கப்படடிருந்தன. இவ்வாறு இங்கு ஒரு சிலரால் தான்  இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 புதிய ஆட்சியிலும்  இது தொடர்வது கவலைக்குரியது  என்றும் கூறினர்.


இந்த ஆர்பாட்டத்தின் போது அங்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர் விவசாயிகளை சந்தித்து உரையாடினார்.

ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.