உணவுப் பொருட்­களில் செயற்கை சுவை­யூட்­டி­களை பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு எதிராக நடவடிக்கை

கல்­முனைப் பிர­தே­சத்தில் செயற்கை சுவை­யூட்­டி­களை உணவுப்
பொருட்­களில் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை
எடுக்­கப்­படும் என கல்­முனை வடக்கு சுகா­தார பணி­மனை தெரி­வித்­துள்­ளது.

கல்­முனை வடக்கு சுகா­தாரப் பணி­ம­னைக்­குட்­பட்ட கல்­முனை, பாண்­டி­ருப்பு, பெரி­ய­நீ­லா­வணை, சேனைக்­கு­டி­யி­ருப்பு நற்­பிட்டி முனை, மணல்­சேனை ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள பழக்­க­டைகள் சில­வற்றில் செயற்கை முறையில் பழங்­களை கனி­ய­வைத்து விற்­பனை செய்யும்
 நட­வ­டிக்­கையில் பலர்  ஈடு­பட்­டுள்­ளனர்.
இதே போன்று தயா­ரிக்­கப்­படும் சிற்­றூண்டி வகைகள்,
உண­வுப்­பொ­ருட்­களில் செயற்கை சுவை­யூட்­டி­களும் கலக்­கப்­ப­டு­கின்­றன.


இவை மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு தீங்கு விளை­விப்­ப­தாக அமைந்­துள்­ள­தாக சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஆர்.கணேஷ்­வரன் தெரி­வித்தார். கல்­முனை வடக்கில் செயற்­கை­மு­றையில் பழம் மற்றும் உணவுகளை தயார்படுத்தும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.