கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெற்ற லயன்ஸ் கழகங்களின் ஆண்டு நிறைவு விழா

சர்வதேச லயன்ஸ் கழக மாவட்டம் 306 C2, பிரதேசம்-08, வலயம்-02 இல் உள்ள லயன்ஸ் கழகங்களின் ஆண்டு நிறைவு விழா நேற்று கிழக்கு பல்கலைகழகத்தில் சிறப்புற நடைபெற்றது.

 இந்நிகழ்வு லயன் பிரதேசம்-08, வலயம்-02இன் தலைவர் லயன் திருவருட்செல்வன் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக லயன் மாவட்டம் 306 C2இன் ஆளுநர் லயன் E W A ஹரிஸ்சந்திர,MJF/JP கலந்து சிறப்பித்திருந்தார்.   வாழைச்சேனை லயன்ஸ் கழகம் தனது 14ஆவது ஆண்டினையும், கிழக்கு பல்கலைகழக லயன்ஸ் கழகம் தனது 8ஆவது ஆண்டினையும் நிறைவு செய்துள்ளதுடன், கிழக்கு பல்கலைகழக லயன்ஸ் கழகமானது வாழைச்சேனை லயன்ஸ் கழகதினால் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் லயன் ராஜகோபால், கிழக்கு பல்கலைகழக லயன்ஸ் கழக தலைவர் லயன் சதீஸ் உட்பட இவ்விரு கழகங்களின் உறுப்பினர்களுடன் லயன் மாவட்டம் 306 C2இன் 1 ஆவது உப ஆளுனர், கடந்தகால மாவட்ட ஆளுனர்கள் மற்றும் ஆளுனர்சபை செயலாளர், பொருளாளர் உட்பட சிரேஸ்ட்ட ஆளுனர்சபை உறுப்பினர்கள், மாவட்ட லயன்ஸ் கழகங்களின் பிரதான உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.