அகில இலங்கை ரீதியில் கணனி மென்பொருள் (Software) போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவன் முதலிடம்

(பழுவூரான்)
அகில இலங்கை ரீதியாக YCS (Young Computer Sientist) நிறுவனத்தால்   நடாத்தப்பட்ட  கணனி மென்பொருள் தயாரிக்கும் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த சந்திரசேகரம் மோகிலன் எனும் மாணவன்,  Easy Maths எனும் மென்பொருளினைத் தயாரித்து முதலாம் இடத்தினைப் பெற்று எமது மாகாணத்திற்கும், மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தரம் 13ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம் மாணவனுக்கான விருது உயர் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வானது நேற்றய தினம் (22.04.2015) இசுருபாய, கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இம் மாணவனுக்கு எமது இணையத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவர் எமது வற்றி நியூஸ் இணையத்தள செய்தியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.