மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்த நாட்களில் அதிக விலையில் மதுபானம் விற்பனை செய்த மூவர் கைது


(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்) புத்தாண்டுக்காக மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்த நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  செங்கலடி மற்றும் திஹிலிவெட்டை பகுதிகளில் அதிகரித்த விலையில் மதுபானம் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


அவர்களிடமிருந்து இருநூற்றுக்கு மேற்பட்ட மதுபான கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

ஏறாவூரப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து குறித்த இடங்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என்எஸ் ஆரியசிங்க தலைமையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பொலிஸாரினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆந் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 12, 13, 14 ஆகிய தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்ததனால் இவர்கள் மதுபானங்களைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி சட்டவிரோதமான முறையில் அதிகரித்த விலையில் விற்பனை செய்துவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பியர் ரின்கள் வீடுகளில் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தாக ஏறாவூர்ப் பொலிஸார் கூறினர்.