மட்டக்களப்பு மாவட்ட செயலக குடியரசு தின நிகழ்வு

இலங்கையின் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை(22) காலை நாடு முழுவதிலுமுள்ள அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டசபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் தோறும் கொண்டாடப்பட்டன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை குடியரசு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. 


நிகழ்வில், தேசியக்கொடியை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் பாடப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலாளர் - காணி திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், திணைக்களத்தலைவர்கள், உட்பட மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ந போதும் 1972 மே மாதம் 22 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் முலமே இலங்கை குடியரசானது. இத்தினமே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.