வித்தியாவை படுகொலை செய்த பாவிகளுக்கு பகிரங்க மரணதண்டனை வழங்க வேண்டும் - கோட்டைக்கல்லாற்றில் மாணவி தெரிவிப்பு !


 (ரவிப்ரியா)
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய மாணவர்கள் வியாழனன்று (21) பி.ப 01.00 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக பிரதான வீதியின் இரு மரங்கிலும் நின்றவாறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 இங்கு ஆர்ப்பாட்டாம் நடாத்திய உயர்வகுப்பு மாணவர்களிடம் வினவியபோது, அவர்கள் முன் வைத்த கருத்துக்கள் இப் படுகொலையானது அவர்களின் மனதை எவ்வாறு பாதித்துள்ளதுஎன்பதை உணரக் கூடியதாக இருந்தது. இப்படுகொலைக்கு தாமதியாது உடன் நீதி வழங்க வேண்டும். பொதுஇடத்தில் வைத்து இந்த காமுகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். சவுதியில் செய்வது போல் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு நடைபெறும் போது எனக்கும் ஒரு கல்லாவது வழங்கப்பட வேண்டும் என்று மாணவி ஒருவர் ஆத்திரத்துடனும் ஆவேசத்தடனும் கூறியது வியப்பைத் தந்தது. எமது இந்தப் போராட்டத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் இலங்கையில் நீதித்துறையே இல்லை என்றாகிவிடும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளியிட்டார்கள்