வித்தியாவின் படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரி செங்கலடியில் சத்தியாகிரக போராட்டம்

(பேரின்பராஜா சபேஷ்) புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நீதி விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுக்கக் கோரி செங்கலடி பிரதேச இளைஞர் யுவதிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை பிரதேச இளைஞர் யுவதிகள் செங்கலடி பிரதான வீதி அருகே தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அரசே நீதி வழங்க நீடிக்காதே”, “வன்புணர்வும் வன்கொடுமையும் நாட்டில் வரலாறாகக் கூடாது”, “ அரசே காடையர்களையொழிக்க காலம் கடத்தாதே” , “ இன்று வித்தியா நாளை யார்? என்று கிடைக்கும் நல்ல விடிவு”, “ அரசே சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும்” “நிறுத்துங்கள் நிறுத்துங்கள் பாடசாலை மாணவர்களுக்கான வன்முறையை நிறுத்துங்கள்” , “ கற்கவிடுங்கள் எங்கள் கனவுகளை சிதைக்காதீர்கள்” , “ வேண்டும் வேண்டும் தபணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” , “ அரசே மாணவர்களுக்கான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து” , “ நாங்கள் அழிந்தது போதும் எங்களைவ hழ விடுங்கள்”, “ விளையும் பயிரை முளையிலே கிள்ளாதே” , “ மாணவர் சமுதாயத்தை பயமுறுத்தாதே வெள்ளை சீருடையில் செங்குருதியா?” , “காமுகர்களை உடன் தூக்கிலிடு” , “ சுற்றிலும் அபாயம் முற்றிலும் வித்திரு பெண்ணே” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி கோரி செங்கலடி பிரதேச இளைஞர் யுவதிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்