பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கண்டனம்

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமையினை கண்டித்து பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் விடுக்கும் கண்டன அறிக்கை 

 கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் புங்குடுதீவினைச் சேர்ந்த பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்குபட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தினை கண்டித்து இனஇ மத பேதமின்றி நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில்இ இச்சம்பவத்தினைக் கண்டித்து பேத்தாழை விபுலானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் தமது கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.

 பல தசாப்த யுத்தத்தின் கோரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத சமூகத்தில் இன்னுமின்னும் பல வடிவங்களில் சமூகம் சீரழிக்கப்படுவதனையும் இதுபோன்ற இரக்கமற்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதனையும் தொடர்ந்தும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பாடசாலை செல்லும் மாணவிகள் முதல் சிறு வயதான குழந்தைகள் வரை நடத்தப்படும் இக்கொலைவெறி வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எவராய் இருந்தாலும் அவர்களுக்கு உரிய சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனை இனிமேல் எவரையும் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவதற்கு அஞ்சுகின்ற வகையில் அமைய வேண்டும். 

 அதற்கு சம்பந்தப்பட்ட பிரதேசத்து காவல்துறையினர் முதல் சட்டவல்லுனர்களும் முன்வந்து நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்களினால் பெண்பிள்ளைகளை தனியாக பாடசாலைக்கு அனுப்புவதற்கே பெற்றோர் அஞ்சுகின்றனர். இத்தகைய சூழலினை மாற்றி நாட்டில் சட்டவாட்சி நடைபெறுகின்றதென கூறுகின்ற அனைத்து தரப்பினரும் இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்ற வேளையில் அவர்கள் பாடசாலைக்குச் சென்று திரும்பி வரும்வரையில் உள்ள சூழலினையும் கருத்தில்கொண்டு பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனமெடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பாய் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்