புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(ரவிப்ரியா)
 பெரியகல்லாறு மத்திய கல்லூரியின்  முன்  இன்று புதன்(20) காலை 11.00 மணியளவில், மாணவர்கள் ஒன்றுகூடி, புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமையான பாலியல் சித்திரவதைக்கும், படுகொலைக்கும் கண்டனமும், உச்ச மட்ட தண்டனையும் வழங்கக் கோரி மாணவர்கள் பதாதைகள் ஏந்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது.


உணர்வு பூர்வமாகவம் உருக்கமாகவும் நடைபெற்ற இந்த கவனஈஈப்ப போராட்டத்தில் பாடசாலையின் ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர். 'எங்களின் பாதுகாப்பு யார்  கையில்?','காமுகர்களின் இச் செயலுக்கு மரண தண்டனை வழங்கு' ,'நாங்கள் அன்னப் பறவைகள் எங்களை அசிங்கப்படுத்தாதீர்கள்', 'சட்டங்களிலும் ஓட்டையா? சர்வாதிகாரம் ஜெயிக்குமா?' 'ஒருபோதும் இத்தவறை அனுமதியோம்!' போன்ற பல சுலோகங்களை ஏந்தி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை. கொதிக்கும் வெயிலில் நின்றவாறு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இப் போராட்டத்தை நடாத்தினர்.

கலந்துகொண்ட உயர் வகுப்பு மாணவி ஒருவர்  தங்களுயை போராட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவி நித்தியாவிற்கு நேர்ந்த இந்த அவலமும் மரணமும் இனிமேல் எந்த மாணவிக்கும் இடம் பெறக் கூடாது, என்பதை மையப்படுத்தியும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி உரிய உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தே இந்த கவன ஈஈப்பு போராட்டததை நடாத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த போராட்டமானது எங்களுடைய பாடசாலையோடு மட்டும்  நின்றுவிடாது எமது வலயம், மாவட்டம், மாகாணம் என அத்தனை பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமெனவம், அப்போதான் நீதி தேவதை முழுமையாக கண்ணைத் திறப்பாள் எனவும் அவர் தெரிவித்தார்;.
நாங்கள் எதிர்பார்க்கின்ற நீதி இதற்கு கிடைக்காவிட்டால் எமது பெற்றோரையும் இணைத்துக் கொண்டு இத்தகைய போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்ததுடன், நல்லாட்சி நிலவுகின்ற இக்கால கட்டத்தில் உரிய நீதி கிடைக்குமென நம்புவதாகவும் தெரிவித்தார் .

எமது பண்பாட்டிற்கும் தொன்மையான கலாசாரத்திற்கும், பெண்களைத் தெய்வமாக போற்றுகின்ற பாரம்பரியத்திற்கும் விழுந்த பலமான அடியாகவே இதை நாம் பார்க்கின்றோம். எனவே மன்னிக்கவே முடியாத குற்றமிழைத்துள்ள இந்த கயவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலும் இத்தகைய குற்றச் செயல்களை எவரும் இனிமேல் எண்ணிப் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்தி சட்டம் எம்மை பாதுகாக்க முன்வர ஆவண்டுமெனவம் தெரிவித்தார்.