அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் மாண­வியின் படு­கொலை !

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீ­வுப்­ப­கு­தியில் கடந்த புதன்­கி­ழமை காணா­மல்­போ­யி­ருந்த பாட­சாலை மாணவி நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை சட­ல­மாக
மீட்­கப்­பட்ட சம்­ப­வ­மா­னது பெரும் பதற்­றத்தை அப்­ப­கு­தியில்
ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
புங்­கு­டு­தீவு ஒன்பதாம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த சிவ­லோ­க­நாதன் வித்­தியா என்ற 18 வய­து­டைய மாண­வியே இவ்­வாறு பாலி­யல் ­
வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார். புங்­கு­டு­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரப்­பி­ரிவில் கல்வி கற்கும் இந்த மாணவி கடந்த புதன்­கி­ழமை காலை 7.30 மணி­ய­ளவில் பாட­சாலைக்கு சென்­றுள்ளார். மாலை வரை மாணவி வீடு திரும்­பா­த­தை­ய­டுத்து பெற்­றோர்கள் அன்­றி­ரவு
 ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர்.


வியா­ழக்­கி­ழமை காலை புங்­கு­டு­தீவு எட்டாம் வட்­டா­ரத்­தி­லுள்ள கைவி­டப்­பட்ட வீடொன்­றுக்கு அரு­கி­லுள்ள பற்­றைக்குள் இருந்து மாண­வியின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. சட­லத்­திற்கு அருகில் மாண­வியின் சைக்கிள் மற்றும்
புத்­தகப் பை என்­பன காணப்­பட்­டுள்­ளன. மாண­வியின் பாட­சாலை சீரு­டையின் இடுப்புப் பட்­டியை அறுத்து கால்கள் இரண்­டையும் மரத்­துடன் வைத்து
கட்­டி­ய­துடன் கழுத்­துப்­பட்­டியை அவிழ்த்து கைகளும் கட்­டப்­பட்­டி­ருந்த
நிலை­யி­லேயே மாணவி மீது பாலி­யல்­துஷ்­பி­ர­யோகம் இடம் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

பிரே­த ­ப­ரி­சோ­த­னையில் மாணவி பாலியல்
வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.
மூச்­சுத்­தி­ண­ற­வைத்தே மாணவி கொல்­லப்­பட்­டுள்­ள­மையும்
நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. இந்த கொடூர சம்­பவம் தொடர்பில் மூவரை ஊர்­கா­வற்­று­றைப் ­பொலிசார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர்.
சம்­ப­வத்தை அடுத்து உரிய வகையில் நீதியை நிலை­நாட்­டக்­கோ­ரியும் மாண­வியின் படு­கொ­லையைக் கண்­டித்தும் புங்­கு­டு­தீ­வுப்­ப­கு­தியில் மாண­வர்கள், மற்றும் பொது­மக்கள் நேற்று முன்­தினம் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர்.

நேற்று மாண­வியின் படு­கொலையைக் கண்­டித்து ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் கடை­களை மூடி பொது­மக்கள் போராட்டம் நடத்­தி­யுள்­ளனர். உயர்­தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி படு­பா­த­க­மாக கொலை செய்­யப்­பட்­டமை குறித்து கண்­ட­னங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.
யாழ். குடா­நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்­களும் படு­கொ­லை­களும் கொள்­ளைகள் உட்­பட குற்­றச்­செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்றே வரு­கின்­றன.

கடந்த வருடம் யாழ்ப்­பாணம் காரை­நகர் பகு­தியில் 9, 11 வயது பாட­சாலை மாண­விகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் வெளியா­கி­யி­ருந்­தன.
பாட­சா­லைக்கு சென்ற மாண­விகள் கடற்­ப­டை­யி­னரால் தொடர்ச்­சி­யாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. அத்­துடன் கடற்­படை­யினர் சிலரும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். பாட­சா­லைக்கு செல்­வ­தாக கூறி செல்லும்
சிறு­மி­க­ளிடம் ஆசை­வார்த்­தை­களைக் கூறி கடற்­படை சிப்­பாய்கள் சிலர் இத்­த­கைய சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

யுத்தம் நடை­பெற்ற காலத்தில் தமிழ் பெண்கள் பெரு­ம­ளவு பாதிப்­புக்­களை சந்­தித்து வந்­தனர். வடக்கு, கிழக்கில் பல்­வேறு பகு­தி­களில் பெண்கள் மீதான பாலியல் வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வந்­தன. இதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது கடந்த காலத்தில் அர­சாங்­கங்கள் திண்­டாடி வந்­தன. இதே­போல இறுதி யுத்­த­கா­லத்­திலும் பெண்கள் மீது பாலியல் வல்­லு­றவு உட்­பட பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவ்­வி­டயம் தொடர்பில் விசா­ரணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டுமென்று ஐ.நா. மனித உரிமை பேர­வையும் கோரிக்கை விடுக்­கு­ம­ள­வுக்கு நிகழ்­வுகள் இடம்­பெற்­றன.

குடா­நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் யாழ்ப்­பாணம், நாவற்­குழி பகு­தி யில் சுண்­டுக்­குளி மகளிர் கல்­லூரி மாணவி கிரு­சாந்தி குமா­ர­சாமி படை­யி­னரால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இவ­ரைத்­தேடிச் சென்ற அவ­ரது தாயார் மற்றும் தம்­பியார், அய­லவர் என மூவர் படை­யி­னரால் கொல்­லப்­பட்டு முகா­முக்­குள்­ளேயே புதைக்­கப்­பட்­டனர்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது குற்­ற­வா­ளி­க­ளான நான்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் மர­ண­தண்­ட­னையும் வழங்­கி­யி­ருந்­தது. இவ்­வாறு மர­ண­தண்­டனை தீர்ப்பு வழங்­கி­ய­போது வழக்கின் முதல் குற்­ற­வா­ளி­யான கோப்ரல் ராஜபக் ஷ செம்­மணி புதை­குழி தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்தே செம்­மணி புதை­குழி தோண்­டப்­பட்­டி­ருந்­தது.
இதேபோல் கோண்­டா­விலில் ரஜனி என்ற பெண் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­படுத்தி படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் இவ்­வா­றான பெரு­ம­ளவு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் குடா­நாட்­டிலும் வன்னிப் பகு­தி­யிலும் இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்ந்தேர்ச்­சி­யாக நடை­பெற்று வந்­த­மை­யா­னது பெரும் அதிர்ச்­சியை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
இதற்கு உதா­ர­ண­மாக காரை­நகர் பகு­தி யில் இரண்டு சிறு­மிகள் படைத்­த­ரப்­பி­னரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­த­ப­்பட்­டதைக் குறிப்­பி­டலாம். வடக்கு, கிழக்கில் இவ்­வாறு வேலியே பயிரை மேயும் சம்­ப­வங்கள் இடம்­பெற்றே வரு­கின்­றன.
ஆனால் புங்­கு­டு­தீவில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் படைத்­த­ரப்­பினர் சம்­பந்­தப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அப்­ப­கு­தியைச் சேர்ந்த மூவ­ரையே பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­தி­ருக்­கின்­றனர்.
யுத்தம் முடி­வ­டைந்­த­போ­திலும் குடா­நாட்டில் பெண்கள் மீதான வன்­மு­றைகள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மை­யினால் மக்கள் மத்­தியில் அச்­ச­நி­லையே தோன்­றி­யி­ருக்­கின்­றது. கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் குரு­நகர் பகு­தியைச் சேர்ந்த ஜெரோம் கொன்­ச­லீற்றா (வயது 22) என்ற யுவ­தியின் சடலம் கிணற்­றுக்­குள்­ளி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பெண்ணும் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வி­வகா­ரமும் நீதி­மன்­றத்தில் தற்­போது விசா­ர­ணையில் உள்­ளது.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­த­போது பெண்கள் மீதான வன்­மு­றைகள் மற்றும் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் மிகவும் குறைந்­த­நி­லை­யி­லேயே காணப்­பட்­டன. யுத்­தத்­தின்­போது வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வரையில் 80 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பெண்­களை தலை­மைத்­து­வ­மாகக் கொண்ட குடும்­பங்கள் பெரும் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றன. இத்­த­கைய குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உரிய ந.டவ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­த­நி­லையில் தொடர்ந்தும் பெண்கள் மீதான வன்­மு­றைகள் அங்கு அதிக­ரித்து வரு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மே­யாகும்.
புங்­கு­டு­தீவில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தைப் போன்ற கொடூ­ரங்கள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டாது. இத்­த­கைய சம்­ப­வங்­களை முற்­று­மு­ழு­தாக ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இவ்­வா­றான கொடூர சம்­ப­வங்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் கைது­செய்­யப்­பட்டு கடும் தண்­ட­னைகள் வழங்­கப்­பட வேண்டும். இதன் மூலம்தான் குறித்த தண்­ட­னை­யா­னது ஏனை­ய­வர்­க­ளுக்கு ஒரு பாட­மாக அமையும்.

வடக்கு, கிழக்கில் போதைவஸ்து பாவ­னையும் மது­பா­வ­னையும் அதி­க­ரித்து வரு­கின்­றன. வடக்கில் குறிப்­பாக குடா­நாட்டை எடுத்­துக்­கொண்டால் போதைவஸ்து பாவ­னை­யா­னது பாட­சாலை மட்­டத்­தி­லேயே அதிக­ரித்து வரு­வ­தாக தக­வல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மற்-றும் பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களுக்கு போதைவஸ்து பாவனையும் ஒரு வகையில் காரணமாகவே அமைகின்றன.
குடாநாட்டில் குற்றச்செயல்களை ஒழிக்கவேண்டுமானால் போதை வஸ்து பாவனையை ஒழிக்கவேண்டும். அத்துடன் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தத்தண்டனை மற்றைய வர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.