பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிறிக்கட் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி அணி சம்பியனானது

(சிவம்)
மட்டக்களப்பு நகரில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் கல்லூரிக்கும் மற்றும் மெதடிஸ்த கல்லூரிக்குமடையிலான பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிறிக்கட் போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி 169 ஓட்டங்களைப் பெற்று இவ்வருடத்திற்கான சம்பியானத் தெரிவு செய்யப்பட்டது.

இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்ற போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியகல்லூரி அணி முழு விக்கட்டுக்களையும் இழந்து 39.4 ஓவர்களில் 168 ஓட்டங்களைப் பெற்றது.

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மிக்கேல் கல்லூரி அணிக்கு வெற்றிக் கிண்ணமும் ரூபா 10,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற மத்திய கல்லூரி அணிக்கு கிண்ணமும் ரூபாய் 5,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரியைச் அணியைச்  சேர்ந்த அபிசேக்கும், ஆட்ட நாயகனாக மிக்கேல் கல்லூரியைச் அணியைச் சேர்ந்த நிலுசாந்தும் , சிறந்த பந்து வீச்சாளராக மத்திய   கல்லூரியைச் சேர்ந்த விகிர்தனும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கிக் கௌரிவிக்கப்பட்டனர்.

வெற்றி இலக்கிற்கு 4 ஓட்டங்கள் தேவையான நிலையில் 50 ஓவர் இறுதிப் பந்து வீச்சின்போது அடிக்கப்பட்ட பந்திற்கு 4 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் மிக்கேல் கல்லூரி அணி சம்பியனானது.

தொடர்ச்சியாக 3 வருடங்கள் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று வந்த நிலையில் இப்போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.