சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கிவைப்பு

 கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வியைத் தொடரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கான கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (29) செவ்வாக்கிழமை சிகண்டி கல்வி நிறுவக குழுமத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது.

2016ம் ஆண்டுக்கான உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான உதவி பணத்தொகையை கல்குடா கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, பாடசாலையின் அதிபர் பகிதரன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். இதன்போது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கணித விஞ்ஞான பிரிவுகளுக்கு மாணவர்கள் ஆர்வமாக கல்வியை முன்தொடர முன்வந்தாலும் பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் மாணவர்கள் தங்களின் சுய விருப்பதின்பேரில் கல்வியை தொடரமுடியாதுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நல்ல உள்ளங்கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்குமிடத்து குறித்த பாடசாலையில் இருந்து உயர் கல்விமான்களை உருவாக்ககூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம் யுத்த காலங்களில் இருந்து தற்போதுவரைக்கும் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமை காணக்கூடியதாக இருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் கல்வி சமுகத்தை உயர்த்துவதற்காக பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் குறைவான செயற்பாடுகளே முன்னெடுக்கபடுவதாக தெரியவருகின்றது.