அழகிய மட்டக்களப்பு: ஆயிரம் கால் ஆலமர கோயில் பார்த்திருக்கிறீர்களா?

மட்டக்களப்பின் வெல்லாவெளியின் வடக்கில் விவேகானந்தபுரம் எனும் கிராமத்தை அடுத்து சுமார் 6 கி.மீ தூரத்தில் ஒரு பக்கம் காடும், மறுபக்கம் வயலும் நிறைந்த இடத்தில் இந்த திறந்த வெளி மரக்கோயில் அமைந்துள்ளது.

பிரமாண்டமான ஆலமரத்தின் மத்தியில் வைரவர், பிள்ளையார், முருகன், நாகதம்பிரான் ஆகிய தெய்வங்களின் சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப் படுகிறது.

இம்மரக் கோயிலின் அருகில் உள்ள காட்டில் 2000 வருடங்களுக்கு முன்பு பொறிக்கப்பட்ட பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே இக்காலப்பகுதியிலேயே ஆலமரக் கோயிலும் தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.