வந்தாறுமூலை விஸ்ணு சந்நிதான திருவேட்டை திருவிழா

மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க  வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழாவின் திருவேட்டை  (26) ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து செந் நெல் விளை நிலத்தில் அமைந்துள்ள சுமார் 200ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கிடாக் குளிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

திருவேட்டைத் திருவிழாவிற்காக மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் இருந்து வயல் நிறைந்த பகுதியான கிடாக்குளி ஆலயத்திற்கு மக்கள் உழவு இயந்திரத்திலும் வாகனங்களிலும் ஒன்றுகூடி; திருவேட்டை நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் கண்டு மகிந்தனர்.

திவேட்டை திருவிழாவிலே ஹனுமான் மற்றும் இராமர் போன்ற அவதாரங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை கொண்டு திருவேட்டை நடைபெற்றது.

நடைபெற்ற விசேட நிகழ்வில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேக பூசைகள் நடைபெற்றதும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணுவுக்கு அபிசேக ப+சைகள் அனைத்தும் மகோற்சவ குருவான ஷப்தரிஷி இந்து குருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் உட்பட ஆலய பிரதம குரு விஸ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் அவர்களினாலும் நடைபெற்றன.

இலங்கா புரியின் ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (01.07.2015) களுவண்கேனி இந்துமா சமுத்திர தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது.