சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் கையொப்பங்கள் சேகரிக்கும் வாகன பேரணி

(சிவம் ) சிறந்ததோர் அரசியலுக்காக எனும் தலைப்பில் பவ்ரல் அமைப்புடன் மார்ச் 12 இயக்கம் இணைந்து மக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் வாகன பவனி இன்று திங்கட்கிழமை மாலை (29) மட்டக்களப்பு நகர மணிக்கூட்டக் கோபுரத்தின் அருகில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜீலை 6 ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடும் எல்லா அரசியில் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 1 மில்லியன்  பொதுமக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


பிரதேச சபை, மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவுகோல்கள் மார்ச் 12, 2015 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் அரசியில் கட்சிகளின் தலைவர்களால் கைச்சாத்திடப்பட்ட படங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் சென்றோரிடம் வினியோகிக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து ஆரம்பமான கையெழுத்து சேகரிக்கும் பணி குருநாகல், தலவ, அனுராதபுர, ரமாவ, மதவாச்சி, வவுனியா மன்னார், திருகோணமலை சென்று இன்று மட்டக்களப்பு வந்தனர்.

நாளை செவ்வாய்க்கிழமை (30) காலை அம்பாரை, சியாம்பிளாண்டுவ, மொனராகலை, பதுளை, மகியங்கணை, கண்டி, கேகாலை, எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, மொறட்டவை மற்றும் விகாரமகாதேவி பூங்காவைச் சென்றடையும்.

வாகன ஊர்தியில் உள்ள மேடையில் வெளிநாட்டிலிருந்து பணத்தைக் கொண்டு வந்து தேர்தலில் போட்டியிடுவோhகளின் செயல்பாடுகள் பற்றிய நாடகம் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.