கல்முனையில் தமிழ் - முஸ்லிம் உறவை வலுப்படுத்த சிவில் சமூகம் அழைப்பு

(பிரசன்னா )
கல்முனையில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இருந்த இன ஐக்கியத்தை சீர் குலைக்கும் முயற்சியின் ஒரு மைல் கல்லாகவே தற்போதய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பார்க்கப்பட வேண்டும் எனவும் தனியான வைத்தியாலையொன்று வரவேற்கப்படவேண்டிய விடயமொன்றாக இருக்கின்றபோதும் 100 வருடங்களுக்குமேல் பழமைவாய்ந்த ஆதார வைத்தியசாலையொன்று 2 கிலோ மீற்றர்களுக்கும் குறைவான தூரத்திற்குள் இருக்கின்றபோது அதன் வழங்களை சுரண்டியும் அபிவிருத்திகளை தடைப்படுத்தியும் அமைக்கப்பட்டதுதான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையென்றும் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை திரிபுபடுத்துவதால் வரலாற்றை மாற்றிவிடமுடியாதெனவும் கல்முனை சிவில் அமைப்பின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஜுன் 20 ம் திகதிய வீரகேசரியில் பிரசுரமாகியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முகவரியிடப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் வை.எல்.எ.யூஸ{ப்பின் கடிதத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்முனையைப் பொறுத்தவரை இன்று நேற்றல்ல 1946 களிலிருந்தே தமிழர்களை சின்னாபின்னப்படுத்தி ஆட்சி அதிகாரங்களை கையகப்படுத்தும் தந்திரோபாயங்களை முஸ்லிம்கள் மேற்கொண்டுவருகின்றார்கள். இதற்கு 1946 ம் ஆண்டின் 3 ம் இலக்க பட்டினசபைகள் சட்டப்பிரகாரமிருந்த Sanitory Board ற்கு பதிலாக கல்முனைக்குடியை இணைத்து பட்டினசபை (Town Council) அமைக்கப்பட்டது முதல் இன்று சாய்ந்தமருது தனியான பிரதே சபையாகப் பிரிகின்றவேளை கல்முனை மாநகர சபையில் தமிழர் தரப்பு பெரும்பான்மையைப் பெறாமலிருக்க மருதமுனையுடன் சில தமிழ்க்கிராமங்களை இணைத்து தனியான பிரதேச சபை அமைக்கின்ற முயற்சி மற்றும் கல்முனையில் தமிழர்களைப் பெருபான்மையாகக்கொண்ட வடக்கு பிரதேச செயலகமொன்று அதிகாரம் பெற்றுவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றமைவரை என அடுக்கிக்கொண்டேபோகலாம். தமிழர் தரப்பு சிறுபான்மைக்கென்றொரு தனியான அதிகார அலகிற்காக போராடிக்கொண்டிருக்க சமயத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பெரும்பான்மை அரசுடன் ஒட்டிக்கொண்ட முஸ்லிம்கள் தமிழர்களின்பாலிருந்த உள்ளுர் நிறுவனக்கட்டமைப்புக்களிலும், நிர்வாகத்திலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டு தமிழர்களை புறந்தள்ளுகின்ற செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர் என்பதே யதார்த்தாகும்.

Dr.யூஸ{ப்பின் கடிதத்தில் பிரதானமாக குறிப்பிடபபட்;டுள்ள அவசர விபத்துப் பிரிவை அமைக்கும் பொருட்டு கடந்;த 1 ½ வருடகாலமாக நிபுணர் குழுவொன்றினால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பவற்றிற்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் வழங்கப்பட்ட அறிக்கையின்படி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையே பொருத்தமானதென அறிக்கையிடப்பட்டு கட்டட நிர்மாணத்திற்கான பூர்வாங்க வேலைகள் யாவும் நிறைவுபெற்று அடிக்கல் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றவேளையிலேயே இதனைத் தட்டிப் பறித்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றும் முயற்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் Dr.யூஸ{ப் போன்ற இனவாதிகளும் செயற்பட்டுவருகின்றார்கள். தட்டிப் பறித்துச் செல்வதுதென்பது இவர்களுக்கு புதியதல்ல என்பதற்கு ஏற்கனவே வடக்கு வைத்தியசாலைக்கென வழங்கப்படவிருந்த பல கோடி ரூபா பெறுமதிமிக்க இயந்திரசாதனங்கள் உட்பட வடக்கு தள வைத்தியசாலைக்கே உரித்தான பிரதான சேவை தொலைபேசி இலக்கமான 067 22 22261 உம் கபளீகரம் செய்யப்பட்டமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கல்முனை நகர் என்பது வடக்கே தாளைவெட்டுவான் சந்தியையும் தெற்கே தரவைப் பிள்ளையார் கோவிலையும் எல்லையாகக் கொண்ட 100ம% தமிழர்களைக் கொண்ட மூன்று கிராம வேகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசமாகக் காணப்பட்டது. நகரிலிருந்த வியாபார ஸ்தாபங்களில் 90ம% தமிழர்களுக்கும் ஏனையவையே சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கும் இருந்தது. யாழ்ப்பாணம் ஸ்ரோர்ஸ், சிசிலியா புத்தகசாலை, இம்பீரியல் சிகை அலங்கார நிலையம், செல்வநாயகம் எரிபொருள் நிரப்பு நிலையம், வேலு ஸ்ரோர்ஸ், வித்தி ஸ்ரோர்ஸ் போன்றவை தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தமையை குறிப்பிட்டுக் கூறலாம். 1967 ம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை 1 ம் குறிச்சியின் கடற்கரைப் பகுதியில் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டதன் மூலமும் முன்னாள் அசைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் (1977 -1987) காலப்பகுதில் கல்முனை 1 ம் குறிச்சியின் வாடிவீடு, கிறவல்குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடுபங்களை குடியேற்றி “இஸ்லாமாபாத்” எனவும் பெயரிடப்பட்டதனாலும், மேலும் யுத்த சூழ்நிலைகளும் அவ்வப்போது இடபெற்ற இனக்கலவரங்களும் எப்போதுமே அரசோடிருந்துவந்த முஸ்லிம்களுக்கு சாதகமான பலனைக்கொடுக்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்று யுத்தத்தால் ஏற்பட்ட பலவீனங்களால் உயிருக்கு அஞ்சி சிறு தொகைப்பணத்திற்கே தங்களது வியாபார ஸ்தாபனங்களை விற்றுவிட்டு வெளியேறவேண்டி தமிழர்கள் நிற்பந்திக்கப்பட்டதும், கல்முனை – அக்கரைப்பற்று வீதியின் வலப்புறத்தேயுள்ள ஆற்றுப்படுக்கைகளை (Tank Bund) தங்களிற்கிருந்த அதிகார பலங்கள் மூலம் கையகப்படுத்தி அவற்றிலே வர்த்தக நிலையங்களை அமைத்துக்கொண்டதன்மூலமுமே  முஸ்லிம்கள் கல்முனைக்குள் தங்களை பலப்படுத்திக்கொள்ள முடிந்தது. இவ்வாறு வந்தேறு குடிகளாக கல்முனைக்குள் நுழைந்த முஸ்லிம்கள் கல்னையில் பரந்து விரிந்து செல்கின்ற பாரம்பரிய பூர்வீகக்குடிகளான தமிழர்கள் தங்களைப் பெருபான்iயாகக் கொண்ட இலங்கையின் அடிமட்ட அதிகார கட்டமைப்பான பிரதேச செயலகம், பிரதேச சபை ஒன்றைப்பெற தடையாக இருக்கின்றபோது தமிழர்கள் இன ஐக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறார்கள் என்பது நகைப்பிற்குரியது.

ஒரே இன, மத, கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட 14 கிராமசேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியுள்ள சாய்ந்தமருது மக்கள் தங்களின் அபிலாகைளைப் பூர்த்தி செய்ய ஒரே இரவில் தனியான பிரதேச செயலகத்தை உருவாக்கிக்கொண்டு பிரதேச சபையை உருவாக்க முயலும்வேளை 29 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி முற்று முழுதாக இன, மத, கலாசாரப் பண்பாடுகளில் வேறுபட்ட மக்கள் தங்களுக்கென தங்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பிரதேச செயலகம் ஒன்றை தரமுயர்த்தக் கோருவதானது எவ்வகையில் பிரிவினைவாதமோ இனவாதமோ ஆக முடியும்.  அதனை தலா வெறும் 05 முஸ்லிம் கிரா சேவகர் பிரிவுகளையுடைய காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளுடன் ஒப்பிடுவதானது தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எவ்வாறு முஸ்லிம்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணாகும்.
மேலும் யுத்த காலப்பகுதிகளில் தங்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கு, அலுவலகக்கட்டமைப்புக்களில் இருந்த அதிகாரங்கள் என்பவற்றை பயன்படுத்தி தங்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பே இல்லாத தமிழர்களது பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்களது காணிகளையும் அரச காணிகளையும் கையகப்படுத்திக் கொண்டு தமிழர் தரப்பால் தாம் விரப்பட்டதாக கட்டுக்கதை விடுவதை முஸ்லிம்கள் நிறுத்த வேண்டும். அக்காணிகள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொண்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவும் வேண்டும். இல்லையேல் வில்பத்து சரணாலயத்தில் மட்டுமல்ல சிங்கராஜ வனத்தில்கூட குடியிருந்ததாக கூறிவிடுவார்கள்.

இறுதியாக. ஏற்கனவே கொள்கையற்ற அரசியல் நடாத்தும் முஸ்லிம் அரசியல் தலமைகளாலும் Dr.யூஸ{ப் போன்ற உண்மைக்கு புறம்பாக வரலாற்றை திரிபுபடுத்துகின்ற இனவாதிகளாலும் கல்முனையில் இல்லாமல் செய்யப்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையேயான இன ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப சாதாரண முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து தமிழர் தரப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் குரல் கொடுப்பதன்மூலமே இரு இனங்களுக்குமிடையே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.