எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் மூலம் தெளி­வான செய்­தியை சொல்­லுவோம் : தமிழ்க் கூட்­ட­மைப்பு கூறு­கின்­றது

எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் நாட்­டு­மக்­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்கும் தெளி­வான செய்­தியை சொல்ல தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.
இலங்கை தமி­ழ­ர­சுக்­ கட்­சியின் பொதுக்­ கு­ழுக்­கூட்டம் கடந்த சனிக்­கி­ழமை திரு­கோ­ண­மலை குளக்­கோட்டன் கேட்போர் கூடத்தில் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெற்று முடிந்­ததைத் தொடர்ந்து பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போது சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்பட்ட­துடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்திய குழுக்கூட்­டத்தை திரு­கோ­ணமலை யில் நடத்­தி­யி­ருக்­கிறோம்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலை முன்­னிட்டு பல­முக்­கி­ய­மான அவ­ச­ரமான முடி­வு­களை எடுக்க வேண்­டிய, ஆரா­ய­வேண்­டிய விட­யங்கள் இருக்­கி­றன்றன. அது­பற்றியெல்லாம் மத்திய குழு உறுப்­பி­னர்கள் ஆழ மாக ஆராய்ந்­துள்­ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்­க­மாக இருக்­கின்ற தமி­ழ­ர­சுக்­கட்சி எவ்­விதம் போட்­டி­யிட வேண்டும். வட, கிழக்கில் எப்­ப­ டி­யான சிறந்த வெற்­றியை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்­பது பற்­றி­யெல்லாம் தீர்க்­க­மாக ஆரா­ய்ந்­துள் ளோம்.
மாவட்டம் ஒவ்­வொன்­றிலும் தொகுதிவாரி­யாக வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வது தொடக்கம் தேர்தல் விஞ்­ஞா­பனம் தேர்தல் வெற்­றிக்­கான திட்­ட­மிடல், மக்­க­ளுக்கு நாங்கள் வழங்க வேண்­டிய வாக்­கு­று­திகள் பற்­றி­யெல்லாம் கலந்து பேசி­யி­ருக்­கிறோம்.
நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்­றத்தை நடை­பெ­ற­வுள்ள தேர்­த லில் பய­னுள்ள மாற்­ற­மாக கொண் டுவரலாம் என்­பது பற்றி ஆராய்ந்­ துள்­ளனர் மத்­திய குழு­வினர்.
தமிழ் மக்­களின் நீண்­டநாள் எதிர்­பார்ப்­பான அர­சியல் தீர்வு மற்றும் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைக­ ளான மீள்­கு­டி­யேற்றம், புனர்வாழ்வு, வாழ்­வா­தாரம், காணிப்­பி­ரச்­சி­னை கள், காணாமல்போனோர் பிரச்­சி னைகள் சம்பந்­த­மாக நடை­பெ­ற­வுள்ள தேர்தலில் நாம் அடையும் வெற்­றி­யி­னூ­டாக எவ்­வாறு தீர்­வைக்­கா­ண­மு­டியும் என்­ப­து­பற்றி ஆக்­க­பூர்­வ­மான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.
அங்­கத்­த­வர்­களின் அனைத்து கருத்­துக்­க­ளையும் உள்­வாங்கி அதற்­ கான முழுப்­ப­ரி­கா­ரங்­களையும் காண முயற்சிகளை மேற்கொள்ளவுள் ளோம்.
இதுதவிர பங்காளிக் கட்சிக ளுக்கு வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கவேண்டிய இடம்பற்றியெல் லாம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள டங்க வேண்டிய விடயங்கள் பற்றி தெளிவாகவும் நிதானமாகவும் கலந் துரையாடப்பட்டுள்ளது.