ஏறாவூரில் விழிப்புணர்வு ஊர்வலம்

(செங்கலடி தினேஸ், சுபஜன்)
 ‘போதையற்ற உலகைக் காண்போம்’ எனும் தலைப்பின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 28ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்திற்கு ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஏறாவூர் நகர் சபை இணைந்து நடாத்தியது.
மட் ஃஏறாவூர் றகுமானியா வித்தியாலய மாணவர்களது பங்குபெறுதலுடன் நடைபெற்ற இவ் ஊர்வலம் ஏறாவூர் நகர சபையில் ஆரம்பித்து பெண்சந்தை வீதி ஊடா வாளியப்பா தைக்கா பள்ளிவாயலில் முடிவுற்றது. இதில் ‘போதையற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன். விழிப்புணர்வு பேரணியின் நிறைவில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, போதைப் பொருள் பாவனை நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரும் கேடாய் அமைந்துள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை விட அவர்களது குடும்பம் சீரழிவதே மிகப்பெரி கவலையாக அமைந்துள்ளது. எனவே  புதிய இளந்தலைமுறையினர் போதையின் பக்கம் நெருங்காமலிருப்பதற்கும் ஏற்கெனவே போதைக்கு அடிமையாகியிருப்போர் அதிலிருந்து விடுபடுவதற்கும் எல்லோரும் பாடுபடவேண்டும் என்றும். போதைப் பொருள் தடுப்பு விடயத்தில் அதிகாரிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் பொதுமக்களும் பொலிஸாரும் என எல்லோரும் இணைந்து ஒருமித்து செயற்பட வேண்டும் என்றார்.