மக்கள் வங்கி இந்து மாமன்றத்தினால் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு பொருட்கள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மக்கள் வங்கி இந்து மாமன்றத்தினால் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியாசாலைக்கு ஐந்து இலட்சம் பெறுமதியான குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி, ஏசி போன்ற பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(27) திங்கட்கிழமை இடம்பெற்றது.

வைத்திய அதிகாரி டொக்.ரி.தவனேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் வங்கி மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எம்.வலித்தூர், மற்றும் மக்கள் வங்கி இந்து மாமன்ற செயலாளர் எஸ்.கலைவாணி, உபதலைவர் எஸ்.மணிமாறன், கே.வேல்ராணி, வைத்திய நிருவாக உத்தியோகத்தர் நித்தியராகினி, கணக்காளர் இந்திரமோகன், திட்டமிடல் பணிப்பாளர் டொக்.கஸ்தூரி, வேள்ட்விஸன் திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், கொக்கட்டிச்சோலை வங்கி முகாமையாளர் மா.மோகனதாஸ், வைத்திய ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.